புரிந்தார்க்கும் வண்டொடு புலம்புதீர்ந் தெவ்வாயு மிருந் (1) தும்பி யிறைகொள வெதிரிய வேனிலான் எ - து: செய்தற்கரிய தவங்களைச் செய்தவர்கள் குறைவற நுகரும் நுகர்ச்சிபோல அழகுகொள்ள அரும்புகள் விரிந்தமையாத (2) கொம்புகடோறும் தான் விரும்புந் தாதைப் பொருந்தியுண்டு விரும்பி ஆர்க்கும் வண்டோடே கருந்தும்பிகளும் வருத்தந் தீர்ந்து எவ்விடமுந் தங்குதல் கொள்ளும்படி மரங்கள் அவற்றை எதிர்கொண்ட இளவேனிற் கண்ணே; எ - று. இது தரவு. (5). | (3) துயிலின்றி 1யாநீந்தத் தொழுவையம் புனலாடி மயிலியலார் மருவுண்டு மறந்தமைகு வான் 2 மன்னோ |
(ஈ) "முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார், பிற்பெரிய செல்வம் பெறலாமோ" பழ. 150, 312. (உ) "ஒரு முழமுஞ் சேறலில ரேனும்பொரு ளூர்க்கே, வரும்வழி வினாயுழந்து வாழ்கதவ மாதோ" (ஊ) "விழுப்பொருள் பரவை ஞால, நோற்பவர்க் குரிய வாகும்" சீவக. 2556, 2986. (எ) "வேண்டிய விளைத்துக் கொள்ளும் விழுத்தவம் விளைத்து வந்தான்" சூளா. சுயம். 113. (ஏ) "பெருந்தவ முள்வழி விரும்புபு செல்லும், பொருளும் போகமும் புகழும் போல" பெருங். (2) 8 : 126 - 7. (ஐ) "வேண்டின வேண்டினர்க் களிக்கு மெய்த்தவம், பூண்டுளர்" கம்ப. அகத்தியப். 8. (ஒ) "அத்தவம் பிறவியை யகற்றி மேதகு, முத்தியை நல்கியே முதன்மை யாக்குறு, மித்துணை யன்றியே யிம்மை யின்பமு, முய்த்திடு முளந்தனி லுன்னுந் தன்மையே". (ஓ) "உடம்பினை யொறுத்து நோற்பார்.......................வெஃகு நெடும்பொருள் பலவுங் கொள்வர்" கந்த. காசிபனுபதேச. 16, 25. (ஒள) "எவ்வகைப் பொருள்களு மீய வல்லது, செவ்விய தவமதே" கூவத்து. நைமிசா. 24. 1. "கொங்குதேர் வாழ்க்கை யென்பதும் இளவேனி லாயிற்று; தும்பி கொங்கு தேருங்காலம் அதுவாகலின்" (தொல். அகத். சூ. 16. நச்) என்பது இங்கே அறிதற்பாலது. 2. "அருடருங் கேள்வி யமையத் தேக்கப், பற்பல வாசான் பாங்குசெல் பவர்போன், மூன்றுவகை யடுத்த தேன்றரு கொழுமலர், கொழுதிப் பாடுங் குணச்சுரும் பினங்காள்" கல். 9 : 1 - 4. 3. (அ) "துயிலின்றி........................ருளராயின்" என்பது தலைவன் பரத்தையரோடு பாசறைக்கட்சென்றதற்கும் (நாற்கவி. சூ. 85; இ - வி. சூ. 453.) (ஆ) "துயிலின்றி.................மன்னோ" என்பது தலைவன்பதியிகந்து (பிரதிபேதம்) 1 யானீந்த, 2 கொல்லோ.
|