பக்கம் எண் :

186கலித்தொகை

(1) முன்னொன்று தமக்காற்றி முயன்றவ ரிறுதிக்கட்
(2) பின்னொன்று பெயர்த்தாற்றும் பீடுடை யாளர்போற்
பன்மலர் சினையுகச் (3) சுரும்பிமிர்ந்து வண்டார்ப்ப
(4) வின்னம ரிளவேனி லிறுத்தந்த 1 பொழுதினான்

எ - து: அகன்ற யாறுகள் அகன்ற உலகிடத்துப் பெருமையையுடைய உயிர்களெல்லாம் உயிர்வாழும்படி பலவாகிய நீரோடுகால்களாலே 2தம்மிடத்தே வந்து பரக்கும் நீரைத் 3தாம் எங்கும் பரந்து ஊட்டிப் பாதுகாத்தலை யுண்டாக்கி அந்நீர் வற்றியபின்பு சிலவாகிய நீரோடு கால்களாலே அறல் ஒழுக, அவ்வாறுகள் அழகுபெறும்படியாகத் தமக்கு முன்னே ஓர் உதவியைச்செய்து அவ்வுதவியிலே முழுக்க முயன்றவருடையகேட்டிடத்தே பின்பு ஓர் உதவியை மீண்டு செய்யும் பெருமையையுடைய 4தொழிலை ஆளுவாரைப்போலே, சுரும்புகளும் ஒலிக்கப்பட்டு வண்டுகளும் ஆர்க்கும்படியாக, அந்நீரை உண்ட கொம்புகளினின்றும் பலமலர்கள் ஆற்றிலே உகும்படி இனிமை பொருந்தின இளவேனில் வந்துவிட்ட பொழுதின்கண்ணே; எ - று.

பன்னீர் சின்னீர் ஆகுபெயர். இது "தகுதியும் வழக்கும்" என்னும் (5) சூத்திரத்திற் கூறிய மரூஉ. "வல்லெழுத் தியற்கை யுறழத் தோன்றும்" (6) என்றதனிற் றோன்றுமென்றதனால் அகரங் கெட லகரம் னகரமாய் வருமொழியில் நகரம் "லன வெனவரூஉம் புள்ளி முன்னர்த், தந வெனவரிற் றனவா கும்மே" (7) என்பதனான் னகரமாய்முடிந்தது.

இது தரவு.


1. (அ) "வேனில் வெயிற்குலர்ந்த மெய்வறுமை கண்டிரங்கி, வானின்வளஞ் சுரந்த வண்புயற்குத் - தானுடைய, தாதுமே தக்க மதுவுந் தடஞ்சினையாற், போதுமீ தேந்தும் பொழில்" இ - வி. சூ. 656. மேற்கோள். (ஆ) "நன்றி யொருவற்குச் செய்தக்கா லந்நன்றி, யென்று தருங்கொலெனவேண்டா - நின்று, தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத், தலையாலே தான்றருத லால்" மூதுரை. 1.

2. எடுத்தோதப்படாதஉரிச்சொற்களுள் பீடென்பது பெருமை குறித்து வருமென்பதற்கு, "பின்னொன்று பெயர்த் தாற்றும் பீடுடையாளர் போல்" என்பது மேற்கோள்; தொல். உரி. சூ. 79. 'அன்ன' தெய்.

3. சுரும் பிமிர்தல்: கலி. 45 : 16, 64 : 12.

4. "இன்னிள வேனில்வந்திறுத்ததென்பவே" பிரமோத். பிரதோஷ. 22.

5. தொல்.கிளவி சூ. 17.

6. தொல். உயிர்மயங்கு. சூ. 13.

7. தொல். தொகை. சூ. 7.

(பிரதிபேதம்) 1 பொழுதின்கண், 2 தன்னிடத்தே, 3 தான், 4 அத்தொழிலை.