பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி223

(1) குரவை தழீஇயா மாடக் குரவையுட்
(2) கொண்டு நிலைபாடிக் காண்

எ - து : 1தெரிந்தஇழையினையுடையாய்; நீயும் நின்கணவனுங் கூடும்படியாக 2இவ்வரையிலுறைகின்ற தெய்வம் மனமகிழும்படி யாம் 3மகிழ்ந்து 4குரவையைக் கைகோத்தாடுதற்கு 5அக்குரவைக் கூத்திற் கொண்டுநிலைச் செய்யுளை நீபாடிக்காண்; 6எ - று.

யாமென்னும் படர்க்கையுளப்பாடு, ஆயத்தை 7உளப்படுத்தி நின்றது.

இது நாமக் காலத் துண்டெனத் தோழியேமுறு கடவு ளேத்தியது (3) ஒருவர் கூற்றினை ஒருவர் கொண்டு கூறுதலிற் கொண்டுநிலையாயிற்று.

30 நல்லாய்,

நனனா டலைவரு மெல்லை நமர்மலைத்
தந்நாண்டாந் தாங்குவா ரென்னோற் றனர்கொல்

எ - து : அதுகேட்ட தலைவி, நல்லாய், நம்மை வரைந்துகொள்ளும் நல்ல நாள் நம்மிடத்தே வருமளவில் நஞ் சுற்றத்தார் தம்மலையிடத்து நாணைத் தாங்குவார் தாம் என்ன நல்வினையைச் செய்தார்கொலென்றாள்; எ - று.

சுற்றத்தாரிடை 9வரைதலாற்பிறந்தநாண் தாங்கலரிதென்றாள்.

33 (4) புனவேங்கைத் 10தாதுறைக்கும் பொன்னறை முன்றி
னனவிற் புணர்ச்ச நடக்குமா 11மன்றோ



''விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்கு'' குறுந். 218. என்பதனால்
கொற்றைவையை யென்றுமாம். (உ) இளம்பூரணர், குறிஞ்சிக்குக் கொற்றைவையும் தெய்வமென்பர்.

1. குரவை, இங்கே குன்றக்குரவை.

2. ''கொண்டு நிலைபாடி யாடுங் குரவையை'' சிலப். (24.)

3. தொல். கற்பி. சூ. 5. நச். இப்பகுதியுரையில்'''தெரியிழாய்...................காண்' எனத் தான்பராய தெய்வத்தினைத் தோழி கற்புக்காலத்துப் பரவுக்கடன் கொடுத்தற்கு ஏத்தியவழித் தலைவனு மேத்துதலாம்'' என்பது காணப்படுகின்றது.

4. வெண்கலியுறுப்பு நிலையொத்துப் பாவேறுபடுங் கொச்சகத்து, இடை நின்ற கொச்சகம் ஈற்றடி குறையாது வந்ததற்கு,'' புனவேங்கைத்........................கடிது மாமன்றோ'' என்பது மேற்கோள்; தொல். செய். சூ. 155. பே.

(பிரதிபேதம்) 1 என வறத்தொடு நிலைவாய்த்தவாற கூறப் பின்னர்த் தெரிந்த, 2இவ்வரையுறைகின்ற, 3 மகிழ்ந்து கைகோத்து, 4குரவைக்குக் கை, 5அக்குரவைக்கூத்திற்குக், 6என்றாள், 7உளப்படுத்திற்று, 8வரைவால், 9தாதுகுக்கும், 10என்றோ.