என்னிடத்தும் நின்னிடத்தும் உயர்த்திக்குறாநின்று (1) மருந்தில்லாத நோயைச் செய்தவனுடைய பயன்றருகின்ற மலையை வாழ்த்தி நாம் நங் கருத்திற்கு வேண்டியவாறெல்லாம் அழைத்துப் பாடக்கடவேமென்று 1உடம்பட்டாள்; எ- று. 2அகவுதல், அகவல்போல நின்றது. தோழி கூற்றினைத் தலைவி விசேடித்துக்கூறினாள்; இரட்டிப்பன்று மணம் நாறுகின்ற சந்தனத்தாற் செய்த உரலென்றதனாற்பயன் வரைந்து கோடற்பொருட்டுத்தலைவி இயற்பழித்தததாகவும், புலானாற்றத்தையும் முத்தை யுமுடைய மருப்பாற்செய்த உலக்கையென்றனாற் பயன் வரைந்துகோடற் பயனின்றிப் புகழ்ச்சிமாத்திரையேயாகத் தோழி இயற்பட்டுமொழிந்ததாகவும், இறைச்சியிடத்தே பொருள் பிறந்தவாறு காண்க. இஃது ''இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே, திறத்தியன் மருங்கிற் றெரியு மோர்க்கே'' என்னும் (2) பொருளியற்சூத்தரத்தானுணர்க. புலால்நாறும்மருப்பென்றதனால் வரைந்துகோடல் பயவாமையின் இறைச்சியாயிற்று. நோய்செய்தான் மலையாயிருக்கவுந் தினைவிளைத்துப் பயன்தருகின்ற அதிசயத்தை யேத்தியெனவே தலைவி இயற்பழித்தாளாயிற்று. 8 ஆய்நுத லணிகூந்த (3) லம்பணைத் தடமென்றோட் டேனுறு கதுப்பினா யானுமொன் றேத்துகு (4) வேய்நரல் வியாக நீயொன்று (5) பாடித்தை
களிற்று, முத்துடை வான்கோடு'' முருகு. 304 - 5. (ஆ) ''யானை, முத்தார் மருப்பின்'' குறிஞ்சி. 35 - 36. (இ) "யானை முத்துடைமருப்பின்" மலை. 517 - 8. (ஈ) ''முத்துடைமருப்பின் மழகளிறு'' பதிற்று. 32 : 3. (உ) ''யானை வெண்கோடு கொண்டு, நீர்திகழ் சிலம்பினன்பொன் னகழவோன், கண்பொரு தமைக்குந் திண்மணி கிளர்ப்ப, வைந்நுதி வான்மருப் பொடிய வுக்க, தெண்ணீ ராலி கடுக்கு முத்த மொடு'' அகம். 282 : 3 - 7. (ஊ) ''தந்திவராக மருப்பிப்பி.......................முத்த மீனு மிருபதுமே'' 1. ''காம நோய்க்கோ ரருமருந் தில்லை யன்றே'' சூளா. கல்யாண. 165. 2. தொல். பொருளி. சூ. 36. 3. அம்பணைத் தடமென்றோள். கலி. 14 : 1. 4. ''வேய்நரல் விடரக நீயொன்று பாடித்தை'' என்பது இத்தையென்னும் இடைச்சொல், முன்னிலை யசையாய் வருதற்கு மேற்கோள். நன். இடை. சூ. 21. மயிலை. வி. இரா. இ - வி. சூ. 276. 5. ''செய்யித்தை சிவலிங்கப் பதிட்டை சிந்தையை, வையித்தை யச்சிவன் மாட்டு நீர்மலர், பெய்யித்தை பேணுமிப் பூசைப் பேற்றினாற், கொய் (பிரதிபேதம்) 1 உடம்பட்டுக் கூறினாள், 2 அகவு அகவுதல்.
|