பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி233

15 (1) கல்லாக் கடுவன் கணமலி சுற்றத்து
(2) மெல்விரன் மந்தி குறைகூறுஞ் (3) செம்மற்றே
தொல்லெழி றோய்ந்தார் தொலையி னவரினு
மல்லற் 1படுவான் மலை

எ - து : தான்கூடின மகளிருடைய இயற்கைநலங் கெடின் அவரினும் வருத்தமுறுகின்றவனது மலை, கடுவன் களவொழுக்கம் ஒழிந்து வரைந்து கொள்ளும் நிலைமையைக் கற்றுத் திரட்சிமிக்க சுற்றத்திடத்தே சென்று மகட் பேசுவார்போல மெல்லிய விரலையுடைய மந்தியை எனக்குத் 2தரவேண்டு மென்று தன்குறையைச் சொல்லுந் தலைமையினையுடைத்து; 3எ - று.

நம் தெய்வவழிபாட்டாற் களவொழுக்கம் ஒழிந்து நம்மை வரைந்து கொள்ளத் துணிந்து நஞ்சுற்றத்தாரிடத்தே சென்று தன் குறைகூறுவனென்று உள்ளுறையுவமங்கொள்க.

19 புரிவிரி புதைதுதை பூத்ததைந்த தாழ்சினைத்
தளிரன்ன வெழின்மேனி தகைவாட நோய்செய்தா
னருவரை 4யடுக்கநா மழித்தொன்று பாடுவாம்.

எ - து : முறுக்குவிரிந்த கொம்புமறைந்த நெருங்கின பூத் தாழ்ந்த சினையிற் ததைந்த தளிரையொத்த அழகையுடைய மேனி அழகுகெடும்படி நமக்கு நோயைச்செய்தவனுடைய 5ஏறுதற்கரிய உச்சிமலைகளையுடைய பூக்கமலைகளை நாம் இனிப் பாடுங்கால் இயற்படமொழிதலை அழித்து இயற்பழித்தலாகிய ஒன்றைப் பாடுவேம் ; 6எ - று.


1. (அ) ''கருவிரன் மந்தி, யருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு''. மலைபடு.
311 - 2. (ஆ) ''கருவிரன் மந்திக் கல்லா வன்பறழ்'' (இ) ''மந்திக் கணவன் கல்லாக் கடுவன்''
(ஈ) ''கல்லா மந்தி கடுவனோடுகளும்'' (உ) ''கருவிரன் மந்திக் கல்லாவன் பார்ப்பு'' ஐங்குறு. 272, 274, 277, 280. (ஊ) ''கல்லாக் கடுவன்'' அகம். 352 : 2. என இச்சாதிக்குக் கல்லாமை அடையாகக் கூறப்படுதலும் காண்க.

2. (அ) ''பண்பினாகிய சினைமுதற்கிளவி'' என்புழி, வேற்றுமைப் பொருள் பற்றிவருங்கால் உறுப்பின் கிழமை யல்லாத தற்கிழமை பயிலாது வருங் குறிப்புவினை முற்றும் உரையிற் கோடலென்பதனாற் கொள்ளப்படும்; சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தலென்பதனாற் கொள்ளினுமமை யுமென்று கூறி 'மெல்விரன்...................செம்மற்றே' என்பதனை மேற்கோள் காட்டுவர். சே. (ஆ) இதுபிறிதின் கிழமையாகிய உடைமைப்பொருள்படநின்றது. என்பர், நச்; தொல். வினை. சூ. 23.

3. றகர வுகரம் குறிப்பு வினை முற்றாய்வருதற்கு, ''செம்மற்று'' என்பது மேற்கோள். தொல். வினை. சூ. 23. கல்.

(பிரதிபேதம்) 1படுப்பான், 2தரவேணுமென்று, 3எனத்தோழி யியற்பட மொழிந்தாள், 4அடுக்கனாம், 5பறுதற்கு, 6என்றாள் தலைவி.