பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி243

துளையுண்டாம்படி உருவி, நறிய வடுவையுடைய மாவினது பசிய கொத்துக்களை உழக்கி, குலையுடைத்தாகிய வாழையினுடைய கொழவிய மடலைக் கிழித்து, பலாவினது பழத்துக்குள்ளே தங்குஞ் சிறிய மலைகள் பொருந்தின பெரிய மலையினையுடையவனைப் பாடுவேமாக வா; 1எ - று.

'பலவின் பழத்துட்.............தோழி' என்றது (1) உறுபெயர்கேட்டலென்னும் மெய்ப்பாடு, முன்புபிறந்தது.

இயக்கங்கேட்ட கானவன் கல்கைவிடுதலைத் தலைவன் மின்வழிகாட்ட வந்து தலைவியோடு புணர்ந்த நிலைமை அலர் கூறக்கேட்ட செவிலி தன் மனையிடத்தே வெளியாக இருந்து கடுஞ்சொற் சொல்லி இற்செறித்தலாகவும், அக்கல்லு வேங்கையினது செவ்விப்பூவைச் சிதறினதன்மை தலைவன் இன்பம் நுகர்கின்ற மனவெழுச்சியைக் கெடுத்ததாகவும், ஆசினிப்பழத்தைப் பயன்படாமல், உதிர்த்ததன்மை அவன் நுகர்கின்ற இன்பத்தைக் கெடுத்ததாகவும், அஃது இறாலிற் றேனைப் பயன்படாமை உகுத்ததன்மை தலைவி நலம் தலைவற்குப் பயன்படாமற் கெட்டதாகவும், அது மாவின் குலையைச் சிதறுவித்த தன்மை ஆயவெள்ளந் தலைவியோடு கூடி விளையாடாமல் நீங்கினதாகவும், அது வாழைமடலைக் கிழித்ததன்மை தோழியை வருத்தினதாகவும், அது பலவின்பழத்துட் டங்கின தன்மை அக்கடுஞ்சொல் தலைவி நெஞ்சத்தே தங்கினதாகவும் உள்ளுறையுவமங்கொள்க.

18 (2) இலங்கு மருவித் திலங்கு மருவித்தே
(3) வானி னிலங்கு மருவித்தே தானுற்ற
(4) சூள்பேணான் பொய்த்தான் மலை

1. இம்மெய்ப்பாட்டிற்கே"பலவின் பழத்துட்டங்கு மலைகெழுவெற்பனைப் பாடுகம் வா" என்பது மேற்; தொல். மெய்ப், சூ, 22, பே, இ - வி , சூ,580.

2. (அ) "வரைதல் வேண்டித் தோழி செப்பிய, புரைதீர் கிளவி புல்லிய வெதிரும்" என்பதனுரையில்
'“இலங்கும்............மலை' எனத் தோழி இயற்பழித்த வாய்பாட்டான் வரைவு கடாவு, அதனை உடம்பட்டுப் பழித்தற்கு உடம்படாதாள் ‘பொய்த்தற்கு குரியனோ ........ டீத்தோன்றியற்று’ எனத் தலைவி இயற்படமொழிந்து எதிர்மறுத்தவாறு காண்க" என்றும் (தொல். கள. சூ. 16) (ஆ) “ஒன்றே வேறே யென்றிரு பால்வயின்" என்னுஞ் சூத்திரவுரையில் ‘இலங்குமருவித்து,,,,,,,மலை’ என்பதை மேற்கோள் காட்டி, "பொய்த்தவன்மலையும் இலங்கும் அருவித்து என வியந்து கூறி, தமது மலைக்கு நன்றி இயல்பு என்றலிற் குறிஞ்சி யுள்ளும் மலை வேறாயிற்று" என்றும் (தொல். களவியல். சூ. 2) கூறுவர், நச்; (இ) இ - வி. நூலாரும் மலை வேறென்பதற்கு மேற்கோள் காட்டுவர்; இ - வி. சூ. 487. (ஈ) "இலங்கு வெள்ளருவியொடு" மது. 299.

3. "வானிலங் கருவிய வரையும்" சூளா. நாட்டு 6.

4. "மாலை யருவியு மோங்குவ வொண்டொடியா, யழுங்குவ தேநமக் காக்கிப்பொய்ச் சூளுற்ற வண்ணல்
வெற்பே." தணிகை. களவு, 477.

(பிரதிபேதம்) 1 என்றாள்.