பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி215

(44) கதிர்விரி கனைசுடர்க் கவின்கொண்ட நனஞ்சார
லெதிரெதி ரோங்கிய மால்வரை யடுக்கத்
ததிரிசை யருவிதன் னஞ்சினை மிசைவீழ
முதிரிண ரூழ்கொண்ட முழவுத்தா ளெரிவேங்கை
வரிநுத லெழில்வேழம் பூநீர்மேற் சொரிதரப்
புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறெய்தித்
திருநயந் திருந்தன்ன தேங்கமழ் விறல்வெற்ப;
8தன்னெவ்வங்கூரினு நீசெய்த வருளின்மை
யென்னையு மறைத்தாளென் றோழியதுகேட்டு
நின்னையான் பிறர்முன்னர்ப் பழிகூறறானாணி
11 கூருநோய்சிறப்பவு நீசெய்த வருளின்மை
சேரியு மறைத்தாளென் றோழியதுகேட்டாங்
கோருநீ நிலையலை யெனக்கூறறானாணி;
14நோயடவருந்தியு நீசெய்த வருளின்மை
யாயமு மறைத்தாளென் றோழியதுகேட்டு
மாயநின் பண்பின்மை பிறர்கூறறானாணி;
எனவாங்கு;
18 இனையன தீமைநினைவனள் காத்தாங்
கனையரும் பண்பினானின்றீமை காத்தவ
ளருந்துய ராரஞர் தீர்க்கு
மருந்தாகிச்செல்கம் பெருமநாம் விரைந்தே.

இது வரையாது வந்தொழுகுந் தலைவனை, தோழி, தலைவியது கற்பு 1மிகுதியும் இவ்வொழுக்கம் அலராகின்றமையும் அவளது ஆற்றாமையுங் கூறி வரைவுகடாயது.

இதன்பொருள்

(1)கதிர்விரி கனைசுடர்க் கவின்கொண்ட (2)நனஞ்சார
லெதிரெதி ரோங்கியமால்வரை யடுக்கத்


1. கனைசுடர், கலி. 120 : அகம். 47 : 9

2. "நனஞ்சாரல்" கலி. 45 : 6. 52 : 6.

(பிரதிபேதம்) 1மிகுதியு மலராகின்றமையும்.