பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி305

1கடிதன் மறப்பித்தா யாயினினிநீ
நெடிதுள்ள லோம்புதல் வேண்டுமிவளே
(1)பல்கோட் பலவின் 2பயிர்ப்புறு (2)தீங்கனி
யல்கறைக் 3கொண்டூ ணமலைச் (3)சிறுகுடி
(4)நல்கூர்ந்தார் செல்வ மகள்

எ - து: (5) பாம்பின் பொறிபோலும் பொறிகளும் பகைவரை வருத்துதலுங் கூடினவலியினையுடைய வில்லின்மேலே வைத்த கையினையிடையையாய் நின்று நிரைத்த வளையணிந்த முன்கையையுடைய என் றோழியைக் காமக்குறிப்பு அவட்கு நிகழும்படி நோக்கி, படிகின்ற (6) கிளிகள் பரக்கும் பசிய கதிரை


1. (அ) "முழவொ டாகுளி...........................பதலையும் பிறவும், கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப, நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்" (ஆ) "கீழு மேலுங் கார்வாய்த் தெதிரிச், சுரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கி, முரஞ்சுகொண் டிறைஞ்சின வலங்குசினைப் பலவே" மலை. 3 - 13. 142 - 4. (இ) "செவ்வேர், சினைதொறுந் தூங்கும் பயங்கெழு பலவின்" நற். 77 : 4 - 5. (ஈ) "வேரு முதலுங் கோடு மோராங்குத், தொடுத்த போலத் தூங்குபு தொடரிக், கீழ்தாழ் வன்ன வீழ்கோட் பலவின்" குறுந். 257.

2. (அ) "பழமீக் கூறும் பலாஅப் போல" பெரும்பாண். 408. என்பதனுரையில் ‘பழத்தின் இனிமையால் மேலாகச்சொல்லும் பலாமரத்தை யொக்க’ என்று இவரெழுதி யிருத்தலும் (ஆ) "செங்காற் பலவின்றீம் பழம்" நற். 232: 5. (இ) "தீம்பழப் பலவின்சுளை" அகம், 182 : 3. (ஈ) "தீஞ்சுளைப் பலவின் பழம்" புறம். 109 : 5. எனவருதலும் காண்க.

3. "சிறுகுடியீரே" கலி. 39 : 11.

4. (அ) "நல்கூர்ந்தார் செல்வமகள்" கலி. 56 : 12. (ஆ) "தம்பொரு ளென்பதம் மக்கள்" குறள். 63. (இ) "பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற், றென்னுடைய ரேனு முடையரோ - வின்னடிசில், புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ்செய்யவாய், மக்களையி கில்லா தவர்" நள. கலித்தொடர். 66. (ஈ) "மக்களைப் பெறுதலி வறுமையொன் றுற்றான் மன்னன்" விநாயக. பிந்தியமயூரேசர்.

5. "பைத்தபாம்பின் றுத்தியேய்ப்பக், கைக்கசடிருந்ந................................றடா" பொருந. 69 - 70. என அரவின்பொறி தடாரிக்குக் கூறுதலுங் காண்.

6. தினைகவரக் கிளிவந்துவீழ்தலும் அவற்றைக் கொடிச்சியர்கடி லும: (அ) "நற்கோட் சிறுதினைப் படுபு ளோப்பி, யெற்பட வருதிய ரெனநீ விடுத்தலிற்.........................தழலுந் தட்டையுங் குளிரும் பிறவுங், கிளிகடி மரபின வூழூழ் வாங்கி........................கிள்ளை யோப்பியும்" குறிஞ்சி. 38 - 101.

(பிரதிபேதம்)1 கடிதின், 2பயிற்புறு, 3கொண்டுமலை