பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி313

குறங்கறுத் திடுவான்போற் கூர்நுதி மடுத்தத
னிறஞ்சாடி முரண்டீர்ந்த நீண்மருப் பெழில்யானை
மல்லரை மறஞ்சாய்த்த மால்போற்றன் கிளைநாப்பட்
கல்லுயர் நனஞ்சாரற் கலந்தியலு நாடகேள்;
தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை
நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்
மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉ
மணங்கென வஞ்சுவர் சிறுகுடி யோரே ;
11 ஈர்ந்த ணாடையை யெல்லி மாலையை
சோர்ந்துவீழ் கதுப்பினாள் செய்குறி நீவரி
னொளிதிகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர்
களிறென வார்ப்பவ ரேனல்கா வலரே;
15 ஆர மார்பினை யண்ணலை யளியை
யைதக லல்குலாள் செய்குறி நீவரிற்
கறிவளர் சிலம்பில் வழங்க லானாப்
புலியென் றோர்க்குமிக் கலிகே ழூரே;
எனவாங்கு;
20 விலங்கோரார் மெய்யோர்ப்பி னிவள்வாழா ளிவளன்றிப்
புலம்புக ழொருவ யானும் வாழேன்
அதனாற், பொதியவிழ் வைகறை வந்துநீ குறைகூறி
வதுவை யயர்தல் வேண்டுவ லாங்குப்
புதுவை போலுநின் வரவுமிவள்
வதுவைநா ணொடுக்கமுங் காண்குவல் யானே.

இஃது இரவுக்குறிவந்த தலைவனை எதிர்ப்பட்டுத் தோழி இரவுக்குறியது ஏதமும் ஏதத்தால்வருந் துன்பமும் தன் னுள்ளத்து விழைவும் கூறி வரைவு கடாயது.

இதன் பொருள்.

முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெற்று
மறந்தலைக் கொண்ட (1) நூற்றுவர் தலைவனைக்

1. (அ) "நூறு மைந்தரி னாதிப னாசிய நூன லந்திகழ் மார்பனை யாருயி, ரீறு கண்டிட லாமவ னூருவை யேறு புண்பட வேயெதிர் மோதிலே" (ஆ) "ஞான பண்டிதன் வாயுகு மாரனு நார ணன்பணி யாலிளை