(5). | (1) மின்சாயன் மார்பன் குறிநின்றேன் யானாகத் தீரத் தறைந்த தலையுந்தன் கம்பலுங் காரக் குறைந்து கறைப்பட்டு வந்துநஞ் சேரியிற் போகா முடமுதிர் பார்ப்பானைத் தோழிநீ போற்றுதி யென்றி யவனாங்கே | 10 | பாராக் குறழாப் பணியாப் பொழுதன்றி யாரிவ 1ணின்றீ ரெனக்கூறிப் பையென வைகாண் முதுபகட்டிற் பக்கத்திற் போகாது தையா றம்பலந் தின்றியோ வென்றுதன் (2)2 பக்கழித்துக் கொண்டீ யெனத்தரலும் யாதொன்றும் | (15). | (3) வாய்வாளே னிற்பக் கடிதகன்று கைமாறிக் கைப்படுக்கப் பட்டாய் சிறுமிநீ மற்றியா னேனைப் பிசாசரு ளென்னை நலிதரி னிவ்வூர்ப் பலிநீ பெறாஅமற் கொள்வே னெனப் பலவுந் தாங்காது வாய்பாடி நிற்ப | 20 | முதுபார்ப்பா, னஞ்சின னாத லறிந்தியா னெஞ்சா தொருகை மணற்கொண்டு மேற்றூவக் கண்டே கடிதரற்றிப் பூச றொடங்கின னாங்கே |
207. (உ) “பழவிறல் மூதூர் பாயல்கொ ணடுநாள்” (ஊ) “ஊர்துஞ் சியாமத் தொருதனி யெழுந்து” மணி. 7 : 63, 20 : 94. (எ) “பல்லுயிர் மடிந்த நள்ளென்யாமத்து” (ஏ) “ஊர்மடி கங்குல்” பெருங்.(2) 9 : 42, (3) 23 : 56. 1. (அ) “சாயலின் மார்பன்” (ஆ) “சாயலின் மார்பு” கலி. 42 : 30, 94 : 38. (இ) சாயலென்பதற்கு ஐம்பொறியால்நுகரும் மென்மையென்று பொருள் கூறி அம்மென்மை ஊற்றிற்கு வந்தமைக்கு ‘சாயன் மார்பு’ என்பதை மேற்கோள்காட்டி யிருத்தல் ஈண்டறிதற் பாலது. தொல். உரி. சூ. 27. நச். சீவக. 8. உரை. 2. “அவரை யருந்த மந்தி பகர்வர், பக்கிற் றோன்று நாடன்” (ஐங்குறு. 271.) என்பதற்கு, ‘அவரையை நிறையத்தின்ற மந்தி பண்டவாணிகர் பைபோலத்தோன்று நாடன்’ என்றெழுதியிருக்கு முரையால் ‘பக்கு’ என்பது பையென்று துணியலாகும். 3. “வாய்வாளாது” கலி. 56 : 29. “வாய்வாளாநின்றாள்” பரி. 20 : 46. (பிரதிபேதம்)1நின்றாயெனக், 2பைக்கழித்து.
|