| டோங்குய ரெழில்யானைக் கனை (1) கடாங் கமழ்நாற்ற (2) மாங்கவை விருந்தாற்றப் பகலல்கிக் கங்குலான் |
5 | வீங்கிறை வடுக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர் தேங்கமழ் கதுப்பினு ளரும்பவிழ் நறு1 முல்லை பாய்ந் (3) தூதிப் (4) படர்தீர்ந்து பண்டுதா மரீஇய பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர |
எ - து: பெருகுகின்றநீரி லவிழ்ந்த கருங்குவளையைக் கொண்டுவந்து விற்பார் வயலிடத்தே பறித்துக்கொண்டவை சுமத்தலிற் றலையிடத்தனவாகிய மலரைச் சூழ்தலைச்செய்து ஊரிடத்தே புகுந்த பாட்டினையுடைய வண்டுக்கு 2உத்தமவிலக்கணங்கள் ஓங்குஞ் சிறந்த அழகினையுடைத்தாகிய யானையினுடைய நாறுகின்ற நாற்றத்தையுடைய செறிந்த மதத்தை அம்மதத்தில் முன் படிந்திருந்த (5) வண்டுகள் விருந்துசெய்ய 3அப்பூவொடு வந்த வண்டுகள் பகற்பொழுதெல்லாந் தங்கிக் கங்குலிடத்து வீங்கின இறையிற் கிடந்த (6) தொடியாலே தங் கணவர் மேனி வடுக்கொள்ளும்படியாகத் தாம் விரும்பின
(ஃ) "இகலி யளிமுர லிருகவு ளினுமுடனிழியு மதமழை குமிழிக ளெழவெழ................முடுகின கரிகளே" வில்லி. சூதுபோர், 91, எட்டாம்போர். 5. பதினாறாம்போர். 4, 20. (அஅ) “வண்டு, மூசுண்ட தான முகமா" திருவிளை. வரகுணனுக்கு. 10. என்பவைகளும் (ஆஆ) "தன்மதந் திவண்ட வண்டு தங்கிய காட்டுள் வேழம், பின்மதஞ் செறித்திட் டஞ்சிப் பிடிமறந் திரிந்து போகும், வென்மதக் களிற்று வெய்ய வசனிவே கத்தின் மேலான்" சீவக. 2313. என்பதும்.(இஇ) "நீலயானை..........வண்டுபடு, பூநாறு கடாஅஞ் செருக்கி" மணி. 19 : 20 - 22. என்பதும் இங்கே அறிதற்பாலன. 1. யானைமதம் கமழுமென்பதனை, "கமழ்கடாஅத் தினம்பிரி யொருத்தல்" (கலி. 21 : 2.) என்பதனாலும் அதன் குறிப்பாலும் உணர்க. 2. "விருந்து அஃறிணைக்கு வருமென்பதற்கு, "ஆங்கவை விருந்தாற்றப் பகலல்கி" என்பது மேற்கோள்; தொல். கிளவி. சூ. 57. நச். 3. "ஊதுதல் - நுகருதல்" அகம். 132: 11; புறம். 70: 12. 4. "படரே யுள்ளல்" தொல். உரி. சூ. 42. 5. "இரிந்ததேன் குவளையி னெற்றி தைவர, முரிந்துபோ தவிழ்ந்து கொங் குயிர்க்கு முல்லையி னரும்புசேர்ந் தணிஞிமி றார்ப்ப வாய்பதம், விருந்தெதிர் கொண்மெனத் தழுவி வீழ்ந்தவே" சீவக. 48. "தொடி யுற்றவடு" (கலி.78: 22) என்பதும் அதன் குறிப்பும்பார்க்க. (பிரதிபேதம்) 1முல்லைப்பாய், 2தம் உடலிலக்கணங்கள், 3பூவோடு
|