பக்கம் எண் :

402கலித்தொகை

எ - து; நின் மார்பின் மாலையை வாங்கிக்கொண்டவளுடைய நெற்றிக் கட்டை வைகறையிலேவருதலின் மனந்தடுமாறிப் 1பூண்ட இரண்டுஅணியுங்கெடாமல் எம் இல்லிடத்தே வந்து நின்றது எம் மேனி கனலுதற்குக் காரணமான காமநோய்க்கு மேலேயும் நீ (1) பொன்னாற்செய்தமகரக்குழையையுடைய (2) பரத்தையடைருடைனே புனலிடத்தே விளையாடுகின்றாயென்று பிறர்சொல்ல நினக்கு உண்டான ஆரவாரத்திலும் பெரியதொன்றன்றோ?
எ - று.

ஆடவர் கோலமும் மகளிர் கோலமுங் கொண்டு வந்துநிற்றலின் இரண்டணியென்றாள்.

17 தணந்ததன் றலையுநீ (3) தளரிய லவரொடு
(4) துணங்கையா யெனவந்த கவ்வையிற் (5) கடப்பன்றோ
வொளிபூத்த நுதலாரோ டோரணிப் பொலிந்தநின்
களிதட்ப வந்தவிக் கவின்காண வியைந்ததை

எ - து: ஒளி பொலிவுபெற்ற நுதலினையுடையாரோடே கூடுதலாலுண்டான (6) பூணின்வடுக் கிடத்தலின் அவர்க்கும்நினக்கும் ஓரணியாகப் பொலிவு பெற்ற நின் செருக்குப் பிறர்பாற் செல்லாமல் அமைதி பிறப்பித்துத் தடுக்கையினாலே வந்த இவ்வழகை யாங்கள் காணும்படி பொருந்தினது நீ எங்களைப்பிரிந்த இதற்கு மேலேயும் நின்னைப் பெறாது தளர்ந்த இயல்பினையுடையாரோடே துணங்கைக் கூத்தாடினாயென்று பிறர்சொல்ல நினக்கு உண்டான ஆரவாரத்திலும் மிகுதியானதொன்றன்றோ? எ - று.

2எனவாங்கு


(ஊ) "தாரு மாலையு மயங்கிக் கையற்று" (சிலப்.2: 35.) எனவும் வருவன ஈண்டு ஒப்புநோக்கற்பாலன.

1. கனங்குழை யென்பதற்கு,பொன்னாற்செய்த மகரக்குழை யென்றே பலவிடத்தும் இவர் பொருள் கூறினும் இந்நுால். 11:7. இல் பொன்னாற்செய்த கனவியகுழை என்று எழுதியிருத்தலால் பொன் மற்றைய உலோகங்களினும் சனமுடையதென்பது பற்றி இவ்வாறு பொருள் கொண்டனர் போலும் ; குறள். 1081. பரி. உரையும் பார்க்க. கனமென்பது பொன்னின் பரியாயநாம மென்பாரு முளர்.

2. "கூடியார் புனலாடப் புணையாய மார்பினில்" (கலி. 72: 15) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

3. (அ) "தளரியால்" கலி. 113:6. (ஆ) "தளரியலாய்" கார் 7. (இ) "தளரியல் பொருட்டின் வந்த சீற்றமும்" கம்ப. இராவணவதை. 204.

4. "துணங்கையுளரவம்" கலி. 70: 14 என்பதன் குறிப்புப்பார்க்க.

5. "கடப் பன்றோ கனங்குழாய்" கலி. 57: 15.

6. "பொன்னாணும் புக்கொளிப்பப் புல்லுவன்" நள. சுயம். 84.

(பிரதிபேதம்) 1பூண்டவிரண்டினையுங் செடாமல், 2எனவாங்கு - ஆங்கசை அளிபெற்றே யெம்மை.