(10). | (1) | துன்பந்துணையாக நாடி னதுவல்ல தின்பமு முண்டோ வெமக்கு |
இது தலைவன் செலவுக்குறிப்பறிந்து நீர் செல்லுங் கடுஞ்சுரத்துத் துன்பத்திற்குத் துணையாக எம்மையும் உடன்கொண்டு சென்மினெனத் தலைவி கூறியது. இதன்பொருள் காடு, குற்றத்தையுடைய மறவர்தம்முடைய மூட்டுவாயை யுடைய அம்புகள், மலைவளர்ந்து போதற்கரிய காட்டிடத்து அரிய வழியைப் போவார்மேலே அழுந்துகையினாலே, உடலஞ்சுருங்கி உள்ளுண்டாகிய நீர் வற்றுகையினாலே உலர்ச்சியாலே வாடுகின்ற நாவிற்கு மரையா மரலைத் தின்னும்படியாக மாரி வறக்கையினாலே தண்ணீர் பெறாத மனத் தடுமாற்றத்தையுடைய வருத்தத்தை அவருடைய கண்ணீர் வீழ்ந்து அந்நாவினை நனைத்துப் போக்குங் கடுமையை யுடையவென்று நீர் உடன் சேறலை மறுத்துக் கூறினால், யான் உயிர்தாங்கியிருத்தலாற்றாது இறந்து படுதலை அறியாதிருந்தீர்போல உடன்சேறலை மறுத்த இம்மொழிகளைக் கூறுதலாற் பெற்றதென்? நெடுந்தகாய்! இக்கூற்று நினக்கு உரிய நன்றாகிய நீர்மைகளை உடைய அல்ல! இனி நீ எம்மிடத்து அன்பு நீங்கப் பிரிதலைக் கருதாதே அவ்வாற்றிடைத் துன்பத்திற்கு எம்மையுந் துணையாகக் கொண்டு நும்மொடு போதலை ஆராயின் அதுவல்லது எமக்கு வேறோர் இன்பமும் உண்டோ? எ - று. இதனால், தலைவிக்குக் கைம்மிகலும் தலைவற்கு இடுக்கணும் பிறந்தன.
என ஒருவனைப் பன்மையாற் கூறிப் பின்னர் "நின்னீரவல்ல நெடுந்தகாய்" என அவனை ஒருமையாற் கூறுவன போல்வனவும் இதனாற் கொள்க வென்பர், நச்; தொல். எச்ச. சூ. 65. (ஆ) முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி ஆற்றுப்படை யல்லாத வழியும் பலரில் வழியும் பன்மையொடு மயங்கி வருமென்பதற்கு (தொல். எச்ச. சூ. 63. ‘முன்னிலை’) இதனை மேற்கோள் காட்டுவர் தெய். (இ) உயர்வு சிறப்புக்களுள் (ஒன்றின்) ‘பால் வழுவமைதி யென அமைப்பர் இ - வி. நூலார்; இ - வி. சூ. 300. (ஈ) "எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந், தேரான் பிறனில் புகல்" என்னும் (144) குறளின் விசேடவுரையில் இதனை உயர்த்தற்கட் பன்மை யொருமை மயங்கி வருதற்கு மேற்கோள் காட்டுவர்; பரிமே. பேராசிரியரும் "நின் மொழி யென்று உம்மவே யென்றது ‘என்னீரறியாதீர் நெடுந்தகாய்’ என்பது போல ஈண்டும் பன்மையு மொருமையு மயங்கி நின்றன" என்பர்; கோவையாருரை. 135. 1. "துன்பத்திற்கி யாரே துணையாவார் தாமுடைய, நெஞ்சந் துணையல் வழி" குறள். 1299.
|