பக்கம் எண் :

முதலாவது பாலை53

(12). (1) மரீஇத்தாங் கொண்டாரைக் கொண்டக்காற் போலாது
பிரியுங்காற் பிறரெள்ளப் பீடின்றிப் புறமாறுந்
திருவினுந் நிலையில்லாப் பொருளையு நச்சுபவோ

எ - து: தாம் மருவி மனத்தாற் கொண்டவர்களைத் தம்மனங்கொண்ட காலம்போலாகாமற் பிரியுமிடத்துப் பிறர் இகழும்படி அவர்க்கொரு வலியின்றாக அவர்கள் 1அப்புறமாக மனமாறுந் திருமகளினுங் காட்டில் நிலைபே றில்லாதபொருளையும் அறிவுடையோர்கள் நச்சுவர்களோ? நச்சார்காண்; எ - று.

தாம், பன்மை யொருமை மயக்கம். தானும் பாடம்.

கொண்டக்காலென்னும் [பெயரெச்சத்திற்] (வினையெச்சத்திற்) கால் ஈண்டுக் காலங்காட்டிற்று. கொண்டக்காற்போலாதென்றது தான்வருதற்கு முன்பு அவர் நின்ற 2நிலையையுங் கெடுத்துப்போமென்னும் 3நினைவிற்று.


1. (அ) "பிறந்த குலமாயும் பேராண்மை மாயும், சிறந்ததங்கல்வியுமாயும் ................இன்மை தழுவப்பட் டார்க்கு"
(ஆ) "பிறக்கலான்...................... இரப்பாரை யெள்ளாமகன்" நாலடி. 285, 307. (இ) "எளிய ரிவரென் றிகழ்ந்துரையா ராகி, யொளிபட வாழ்த லினிது" இனியது. 30. (ஈ) "இல்லாரை யெல்லாரு மெள்ளுவர்" குறள். 752. (உ) "துளியுண் பறவைபோற் செவ்வனோர்்ப் பாரு, மெளியாரை யெள்ளாதா ரில்" பழ, 287. (ஊ) "எளியாரை, யெள்ளானீத் துண்பானே லேதமின் மண்ணாண்டு, கொள்வான்" ஏலாதி. 47. (எ) "பரப்புநீர் வைவமுற்றுந் தேரினு மில்லையிரப்பாரை யெள்ளாமகன்" தகடூர்யாத்திரை. (ஏ) "எள்ளன் மின்னில ரென்றெண்ணி யாரையும்" வளையாபதி. (ஐ) "திருமக ணிலைமையுஞ் செல்வர் கேட்டிரேன், மருவிய மனிதரை யிகந்து மற்றவள், பொருவறு புகழினர்ப் புகிய காமுறு, மொருவர்கண் ணுறவில ளுணர்ந்து கொண்மினே" சூளா. முத்தி 14. (ஒ) "இல்லோரை யற்ப மிகழோம்" அரிச்சந்திர. மயான. 26. (ஓ) "அருந்திரவியங் காக்கைக் கேதனத்தா டருமோ திரு வன்றியிலே" திருவரங்கத். 96. (ஒள) "இருங்கடற் புவி யிடத்தினில் லாரையெல் லாருமெள் ளுவரென்னா, வொருங் குணர்ந்தமுன் னோருரைத் திட்டஃ துண்மையென் றுளங் கொண்ணீ" குசேலோ. மேல்கடலடைந்த. 164. என்பவைகளும், (ஃ) "கிழவ ரின்னோ ரென்னாது பொருடான், பழவினை மருங்கிற் பெயர்பு பெயர் புறையும்" (கலி. 21: 10 - 11) என்பதன் குறிப்பில் இவ்விடத்திற்குப் பொருந்துவனவும் ஈங்கு நோக்கத்தக்கன.

(பிரதிபேதம்) 1 புறமாக, 2 நிலைமையும், 3 நிலையிற்று.