இரைகவர்ந்த இளைப்பால் ஓய்ந்து பறக்கும் மடப்பத்தையுடைத்தாகிய நடையினையுடைய அன்னத்திரள் அந்திக்காலத்தே தங்குதல்கொண்டிருந்த தன்மையவாக, துறை தன்னிடத்தேகொண்டு உயர்ந்த மணற்குன்றிலே நல்லார், தம்முடனே அமர்ந்த ஆயத்தாருடனே பொருந்தி நிறைந்திருக்கின்றதனைக் கண்டேனென்றான். எ - று. மா+இனம் மாயினமென மரூஉவான் (1) யகரவுடம்படுமெய் பெற்றது. அன்னவாகவென விரிக்க. 21 | (2)ஓர்த்த திசைக்கும் பறைபோனின் (3)னெஞ்சத்து | | வேட்டதே கண்டாய் கனா |
எ - து: அதுகேட்ட தலைவி, கொட்டுகின்றவன் தன்மனத்தில் ஓர்த்த ஓசையைத் தானும் ஒலிக்கும் பறைபோல நின்னுடைய நெஞ்சத்து விரும்பின இன்பத்தையே கனாவாகக் கண்டாயென்றாள். எ - று. 23 | கேட்டை, விரையனீ மற்று வெகுள்வா யுரையாண் | | டிதுவாகு மின்னகை நல்லாய் பொதுவாகத் | | தாங்கொடி யன்ன தகையா ரெழுந்ததோர் | | பூங்கொடி வாங்கி யிணர்கொய்ய வாங்கே |
(4) | சினையலர் வேம்பின் பொருப்பன் பொருத | | முனையரண் போல வுடைந்தன்றக் காவிற் | | றுனைவரி வண்டி னினம். |
1. ‘கோயில்’ ‘மாயிருஞாலம்’ என வருதலையும் நோக்குக, 2. “ஓர்த்த திசைக்கும் பறை” என்னும் பழமொழியும் "இரட்டுறு முரச மென்ன விசைத்ததே யிசைக்கின் றாயை” என்னும் கம்பர் வாக்கும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலன. 3. “வானர மகளிரிற் றானணி சுடர, முகைநலக் காந்தண் முகிழ்விர னோவத், தகைமலர்ப் பொய்கைத் தண்செங் கழுநீர், சில்லெனப் பிடித்து மெல்லென விழிந்து, நண்ண வருவோள் போலுமென்க, ணாற்றே னவட னஞ்சாந் திளமுலை, நோற்றே யாயினு நுகர்வல் யானெனத், தெய்வ நல்யாழ் கையமைத் தியற்றிய, வைதேந் தல்கு லவந்திகை வீவு, முறுதுணைத் தோழ னிறுதியு நினையான், மாண்ட சூழச்சி மந்திர வமைச்சர், வேண்டுங் கொள்கைய னாகி நீண்ட, தடம்பெருங் கண்ணி தகைபா ராட்டி, யுறுவகை யண்ண றறுகண் பொருந்தலுங், கைவயிற் கொண்ட கழுநீர் நறும்போது, கொய்மலர்க் கண்ணி கொடுப்போள் போலக், கனவிற் றோன்ற” பெருங். (3). 7: 49 - 65. 4. “சினையலர் வேம்பன் றேரா னாகி”. சிலப். பதிகம். 28.
|