பக்கம் எண் :

மூன்றாவது மருதம்569

“பறழெனப் படினு முறழாண் டில்லை” (1) என்பதனால், பறழ் பறவைக் காகாதாயினும் இவனை, ‘யாமையெடுத்து நிறுத்தற்றால்’ என ஊர்வனவாகக் கூறலிற் பறழென்றார். தலை, ஆண்டலையா யிருத்தல் பற்றி ஆண்டலைக்கு ஈன்ற மகனென்றாள்.

9 1மாண்ட, எறித்த படைபோன் முடங்கி மடங்கி
நெறித்துவிட் டன்ன 2நிறையேரா லென்னைப்
பொறுக்கல்லா நோய்செய்தாய் 3பொறீஇ நிறுக்கல்லே
னீநல்கி னுண்டென் னுயிர்

எ - து: அதுகேட்ட குறளன், மாட்சிமைப்பட்ட கலப்பையிற் றைக்கும் (2) படைவாள்போலே ஓரிடங் கூனாய்ப் புறப்பட்டு ஓரிடம்முன்னே வளைந்து வலிய முறித்து விட்டாற்போன்ற நிறைந்த அழகாலே என்னைப் பொறுக் கல்லாத காம நோயைச் செய்தாய்; யான் ஆற்றி நிறுக்கமாட்டேன்; நீ அருளு வாயாயின் என்னுயிருண்டு; இனி நின்னினைவைக் 4கூறுவாயென்றான். எ-று.

பொறியும் பாடம்.

13 குறிப்புக்காண், (3) வல்லுப் பலகை யெடுத்து நிறுத்தன்ன
கல்லாக் 5குறள கடும்பகல் வந்தெம்மை


தழுவிச் சேர்ந்தன, பூண்டெழு கரதலம் பொறுக்க லாதன, வாண்டலை நிகர்த்தன வெருவை யாடுவ” என்னும் கம்பர்வாக்காலும் அறியலாகும். (ஏ) இச்சொல்லுக்குப் பொருள் ‘யானைமுகன்’ ‘துடியிடை’ என்பவற்றிற்குப் பொருள் கொள்ளுதல்போலக் கொள்க. (ஐ) “நீண்ட பலி பீடத்தி லரிந்துவைத்த நெடுங்குஞ்சிச் சிரத்தைத்தன் னினமென் றெண்ணி, யாண்டலைப்புள் ளருகிருந்து பார்க்கு மாலோ வணைதலுமச் சிரமச்ச முறுத்து மாலோ” என்று சயங்கொண்டார் கூறுதலால், இப்புள்ளே ஆண்மகன் றலைபோன்ற தென்று கூறுவாரும் உளர்.

1. தொல். மரபியல். சூ. 7.

2. இதுகொழுவென் றும்காறென்றும்கூறப்படும்; குற்றியென்பாருமுளர்.

3. (அ) “வல்லென்கிளவி தொழிற்பெய ரியற்றே” “நாயும் பலகையும் வரூஉங் காலை, யாவயி னுகரங் கெடுதலு முரித்தே, யுகரங் கெடுவழி யகர நிலையும்” தொல். புள்ளி. சூ. 78 - 79) என்புழி, கெடுதலு மென்பதில், “உம்மை எதிர்மறை யாகலான் உகரங் கெடாதே நின்று.....................‘வல்லுப் பலகை’ என வருதலுங் கொள்கஎன்பர். நச். (ஆ) "வல்லே தொழிற்பெய ரற்றிரு வழியும், பலகைநாய் வரினும் வேற்றுமைக் கவ்வுமாம்” (நன். மெய்யீற். சூ. 28.) என்பதனுரையில்

(பிரதிபேதம்)1மாண்டை, 2நிறையோரா, 3போறிநிறுக்கல்லேன், 4கூறென்றாள், 5குறளே.