பக்கம் எண் :

முதலாவது பாலை57

வினவியாட்கு, அவரைக் கண்டு அதறமெனவே கருதிப் 1பேர்ந்தேம்,நீரும்அவர்திறத்து 2 எவ்வம்பட வேண்டாவென 3 எடுத்துக்காட்டிஅவர் தெருட்டியது.

இதன் பொருள்.

(1) எறித்தரு கதிர்தாங்கி யேந்திய (2)குடை நீழ
(3) லுறித்தாழ்ந்த கரகமு (4) முரைசான்ற முக்கோலு
(5) நெறிப்படச் சுவலசைஇ வேறோராநெஞ்சத்துக்
குறிப்பேவல் செயன்மாலைக்கொளைநடை யந்தணீர்

1. "எறித்தரு கதிர்தாங்கி,,,,,,,,,,,,,,காணிரோ பெரும" என்னும்பகுதி சுரத்திடை வினாதற்கு மேற்கோள். தொல். அகத். சூ. 40. இளம்.

2. (அ) "விரிகுடை தண்டே குண்டிகை" (அந்தணப்பூத வருணனை) சிலப். 22: 31. (ஆ) "குடையார் நிழலுறி சேர்கர கத்தொடு குன்றிடத்து, நடையான் மெலிந்து வருகின்ற வந்தணிர் ஞாலமெல்லா, முடையா னொளிவே லுசிதன்றென் கூடலொண் டீந்த மிழ்போ, லிடையாள் விடலைபின் சென்றன ளோவிவ் விருஞ் சுரத்தே" இறை. சூ. 23. மேற்கோள். (இ) "ஆதபத்திரங் குண்டிகை யொருகையி னணைத்துப், போதமுற்றிய தண்டொரு கையினிற் பொலிய, மாதவப்பய னுருவுகொண் டெதிர்வருமாபோ, னீதிவித்தக னடைந்தமை நோக்கின னெடியோன்" கம்ப. மீட்சி. 181. (ஈ) "உறித்தாழ கரகமு மூன்றுமுக் கோலு முடுத்த செவ்வா ளெறித் தாலனைய விருந்தவ ராடையு மிந்திரவி மறித்தா லனைய குடையுங் கொண்டேவரு வீரொருவ, னெறித்தாழ் குழல்வல்லி முன்செல்லு மோவிந் நெடுஞ்சுரத்தே" அம்பிகா. 400.
(உ) "ஒரு வெண் குடையிரு நீழன்முக் கோல்கொண் டொழுக்கத்தினா, லருவெங் களரியைந் தாறுசெல் வீரரு ளீரெழுபார், மருவெண் டிசைபுகழ் வாணன்றென் மாறையென் வஞ்சியன்னாள், பொருவெஞ் சுடரிலை வேலொரு காளைபின் போயினளே" தஞ்சை. 341.

3. (அ) "உறித்தாழ் கரகம்" சிலப். 30, 64, 90. (ஆ) "முறுக்குறி தூங்கு, குண்டிகைத்தடங் கையராய்" திருவிளை. சமணரைக் கழு. 18.

4. "கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான், முக்கோ லசைநிலை கடுப்ப" முல்லை. 37 - 8. "நான்மறை நெறிமுக், கோலு மேந்திய குடைகளுங் குண்டிகைக் கரமும்". "இன்ன கொண்டுளவிருடிகள் யாவரு மெய்தி" அரிச்சந்திர. விவாக. 3-4.

5 "குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர்" என்பது மாலை இயல் பென்னும் பொருளில் வருதற்கு மேற்கோள். தொல். உரி. சூ. 13. ‘மாலை’ தெய்.

(பிரதிபேதம்) 1 போந்தேம், 2 அவலம், 3 எதுக்காட்டி