பக்கம் எண் :

574கலித்தொகை

37ஆங்காக, (1) சாயலின் மார்ப 1வடங்கினேன் ஏஎ
பேயும் 2பேயுந் துள்ள லுறுமெனக்
கோயிலுட் 3கண்டார்நகாமை வேண்டுவ
4றண்டாத் தகடுருவ வேறாகக் 5காவின்கீழ்ப்
6போதரகடாரப் புல்லி (2) 7முயங்குவேந்
துகடபு காட்சியவையத்தா ரோலை
முகடு 8காப் பியாத்துவிட் டாங்கு

எ - து: அதுகேட்ட கூனி, அப்படியேயாகுக; யானும் மென்மையால் இனிய மார்பனே! இகழ்ந்து கூறுதலைத் தவிர்ந்தேன்; இனி இக்கோயிலுட் கண்டவர்கள் நம்மை ஏஎயென 9இகழ்ந்து பேயும் பேயுந் தம்மிலே துள்ளுதலை இக்கூனுங் குறளும் உறாநிற்குமெனக் கூறி நகாதிருத்தலை விரும்புவேன்; ஆதலால், அமையாத பொற்றகடுபோலும் உருவத்தினையுடையாய்! கோயிலுக்கு நீங்கலாகக் காவின்கீழே போதருவாயாக; 10துகளறுகின்ற அறிவினையுடைய அவையிலுள்ளார் திரட்சிபொருந்தின ஓலையின்றலையைக்கட்டி அதன் தலையிலே (3) 11அரக்கிலச்சினை யிட்டுவிட்டாற்போல நிரம்பாத உடலின் உள்வாய் முயக்கம் பெற்று நிறையும்படி இறுகப் புல்லிக் கூடக்கடவே 12மென்றாள். எ - று.


1. “இன்சாயன் மார்பன்” கலி. 65 : 5. என்பதும் அதன் குறிப்பும் “சாயலின் மார்பின்” கலி. 112 : 23 என்பதும் ஒப்பு நோக்கற்பாலன.

2. இங்குள்ள பிரதிபேதத்தை நோக்கின், “கண்டார் நகாமை வேண்டுவ றண்டா” என்பதை ஓரடியாக்கி, பிற்பகுதியைக் ககரவெதுகை நயம் பொருந்தின நான்கடியாகப்பிரிக்கலாம். உரை இடங்கொடுக்கவில்லை.

3. (அ) "ஒலை, யரக்குப்பொறி யொற்றி யாணையிற் போக்கி” பெருங். (1) 37. 208 - 209. (ஆ) “அரக்கிலச் சினையின் வைத்த, வெஞ்சலி லோலை காட்ட” சூளா. தூது. 82. எனவும். (இ) “பொறியுடை யோலை”.
(ஈ) “ஓலைத்தூதிற், பெரும்பொறி யண்ண லரும்பொறி யொற்றி”. (உ) “பொறியொற் றோலையோ டறியப் போக்கி” பெருங். (1) 45. 30, 58: 81 - 82, (5) 7: 71 எனவும். (ஊ) “புன்புல வழியடைத் தரக்கிலச் சினைசெய்து” நாலாயிர. திருச்சந்த. 76. எனவும் வருவன காண்க.

(பிரதிபேதம்)1வணங்கினேன் ஏஎ, பேயும் பேயந்துள்ள, 2பேயுமீந்துள்ளல், 3கண்டோர் நகாமல், 4கண்டாய்தகடு, 5ஞாயிற்கீழ்ப், 6போதியகடார, 7யங்குவேன்றோடா துகடீர்பு, 8யாப்பியாத்து, 9இகழ்ந்துகூறிப்பேயுந், 10துகடீர்கின்றவறிவினை, 11அரக்கிலைச்சினை விட்டுவிட்டாற்போல, 12என்றாள் போதருபோதாரென.