அக்கடலுக்கு என்ன பயனைக் கொடுக்கும்? ஆராயுங்காலத்து நும்முடைய மகளும் பயன் படும் பருவத்து நுமக்குப் பயன்படாள்; எ - று (18). | ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யுஞ் சூழுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே |
எ - து; எழுநரம்பாற் கூட்டிய இனிய ஓசைகள் பாடுவார்க்குப் பயன்கொடுத்தலல்லது யாழிடத்தே பிறிந்தனவாயினும் அவ்வோசைகடாம் அந்தயாழுக்கு என்னபயனைக் கொடுக்கும்? ஆராயுங் காலத்து நும்முடைய மகளும் பயன்படும் (1) பருவத்து நுமக்குப் பயன்படாள்; எ - று. இவை மூன்றும், தாழிசை. எனவாங்கு, அசை. இது தனிச்சொல் (22). | இறந்த கற்பினாட் கெவ்வம் படரன்மின் சிறந்தானை 1வழிபடீஇச் சென்றன ளறந்தலை பிரியா வாறுமற் றதுவே |
எ - து; ஆதலான் மிக்க கற்பினை யுடையாளுக்கு வருத்தமுறாதே கொள்ளுமின். (2) இருமுது குரவரிலுஞ் சிறந்த கணவனை வழிபட்டு அவன் பின்னே போனாள். இம்மையில் இங்ஙனங் கற்புப் பூண்டு நிகழ்த்தும் (3) இவ்வில்லறமே அறங்களிற் றலையான அறம்; மறுமையில் இவ்விருவரும் நீங்காமற் சுவர்க்கத்திலே செல்லும் வழியும் அவ்வழிபாடே; எ - று. இது சுரிதகம். 2படரன்மின் ஒருசொல்; படர்மினென்பதன் மறையாதலின். அறத்திடத்து நின்று நீங்காதவாறென்று பொருள்கூறின், தலைப்பிரியாவாறெனப் பகரவொற்றுப் பெறுதல்வேண்டும். " ஐகாரவிறுதிப் பெயர் நிலை முன்னர், வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே" (4) என்றலின்.
1. " கொடுத்தலுந் துய்த்தலுந் தேற்றா விடுக்குடை, யுள்ளத்தான் பெற்ற பெருஞ் செல்வ - மில்லத், துருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தா, லேதிலான் றுய்க்கப் படும்" நாலடி. 274. 2. (அ) "கொண்டானிற் றுன்னிய கேளிர் பிறரில்லை" நான்மணி. 56. (ஆ) "தங்கணா யகரிற் றெய்வந் தவம் பிறி திலவென் றெண்ணு, மங்கைமார் சிந்தை போலத் தூயது" கம்ப. வேள்வி. 16 (இ) "குலமகட்குத் தெய்வங் கொழுநனே மன்ற, புதல்வர்க்குத் தந்தையுந் தாயும்" நீதிநெறி. 27. 3. (அ) "அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை" குறள். 49 (ஆ) "இல்லறமல்லது நல்லற மன்று" 4. தொல். உயிர்மயங்கு. சூ. 78. (பிரதிபேதம்) 1 வழிபட்டுச், 2 படாமின் ஒரு சொல்; படுமென்பதன்.
|