நீண்டுதோன் றுயர்குடை நிழலெனச் சேர்ந்தார்க்குக் காண்டகு மதியென்னக் கதிர்விடு தண்மையு மாண்டநின் னொழுக்கத்தான் மறுவின்றி வியன்ஞாலத் தியாண்டோருந் தொழுதேத்து மிரங்கிசை முரசினாய் எ - து: குற்றமற்று மாட்சிமைப்பட்ட நின் ஒழுக்கத்தாலே கடலின்மீதே தோன்றி இருளைக்கெடுக்கும் (1) ஞாயிறுபோல இவ்வுலகத்திலுள்ள பகைவர் 1நெஞ்சம் அஞ்சும்படி வெருவுதல்வந்த கொடுந்தொழிலையும் நெடிதாய்த் தோன்றுகின்ற (2) ஏனையவற்றின் உயர்ந்தகுடையைத் 2தமக்கு நிழலென்று கருதிச் சேர்ந்தவர்கட்குக் காட்சிதருங் கதிரைச் சொரியும் (3) மதியையொத்த குளிர்ச்சியினையும், அகற்சியையுடைய உலகில் எவ்விடத்துள்ளோரும் வணங்கிப் புகழும் இரங்குகின்ற ஓசையினையுடைய முரசினையுமுடையாய்! எ - று. ஈண்டு - இவ்வுலகம். ஏத்துமென்னும் பெயரெச்சம், முரசின்மேலன்றி 3அதனையுடைய மன்னவனென்னும் பெயரோடு முடிந்தது. 7 ஐயந்தீர்ந் தியார்கண்ணு (4) மருந்தவ முதல்வன்போற் பொய்கூறா யெனநின்னைப் புகழ்வது கெடாதோதா
1. (அ) "ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையுந், திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்..........................உடையை யாகி" (ஆ) "ஞாயி றனையை நின் பகைவர்க்குத், திங்க ளனையை யெம்ம னோர்க்கே" புறம். 55 : 13 - 6; 59 : 6 - 7. (இ) "நின், வெம்மையும் விளக்கமு ஞாயிற்றுள, நின், தண்மையுஞ் சாயலுந்திங்களுள" பரி. 4 : 25 - 26. (ஈ) "நண்ணுநர் பகைவரென் றிவர்க்கு நாளினுந், தண்ணியன் வெய்யனந் தானை மன்னனே" சூளா. நகர. 17. என்பன இங்கே ஒப்புநோக்கற்பாலன. 2. இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை, யுருகெழுமதியி னிவந்து சேண் விளங்க" புறம். 31 : 3 - 4. 3. "திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதுங், கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடை போன்றிவ், வங்க ணுலகளித்த லான்" என்பதும் அதன் உரையில் இது பண்பும் பயனுங் கூடின உவம மென் றெழுதியிருத்தலும் இங்கே அறிதற்பாலன. சிலப். 1; 1 - 3. 4. இங்கே அருந்தவ முதல்வனென்றது சிவபெருமானைப் போலும்; (அ) "தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே" புறம். 1 : 13. (ஆ) "நற்றவனைப் புற்றரவ நாணி னானை" (இ) "நற்றவனை நான்மறைக ளாயி னானை" (ஈ) "நற்ற வாவுனை நான்மறக்கினுஞ் சொல்லுநா நமச்சி வாயவே" (உ) "நற்ற வன்காண்" (ஊ) "மாதொர் கூறுடை நற்றவனை" (பிரதிபேதம்)1நெஞ்சஞ்சும்படி, நெஞ்சஞ்சுடும்படி, 2தாழ்க்குநிழலென்று, 3அதனுடையமன்னவன்.
|