ஈன்று, பின்னர்த் (1) தீயைக் கடைந்து, அதிற்பிறந்த நெருப்பைச்சேரநிரைத் தாற்போன்ற அலர்ந்த இதழினையுடைய செங்காந்தட்பூவும், நீலமணியை யொக்கும் நிறத்தினையுடையனவாகிய (2) 1காயாம்பூக்களும் பிறவும் அழகுகொள்ளும்படி சூடிய கண்ணியையுடையவர் சேரத்தொக்கு ஏறுதழுவுவாரோடே மாறுபடுதலை எறட்டுக்கொண்ட தம் மைந்தினைச் சேரநிறுத்துதற்கு மகட்கொடை நேர்ந்த ஆயர் சேரக்கூடி, பிறராற் சீறுதற்கரிய வலியினையுடைய இறைவனுடைய குந்தாலிப்படைபோலே கூரிதாகக் கொம்புகளைச் சீவி, ஏறுகளைச் சேரத் தொழுவிடத்தே புகுதவிட்டார். எ - று. தண்புலத்துநின்ற பிடவும் காந்தளும் காயாவும் பிறவுமென்க. இவை (3) முதற்பொருட்கேற்ற அடையடுத்துநின்ற ஆகுபெயர். ஈன்றென்பதுநிகழ் காலமுணர்த்துஞ் செய்தெனெச்சம். (4) ஞெகிழியுடனென்னாது ஞெலிபுடனென எச்சமாகக் கூறுதலின் இவ்வாறு பொருள் 2கூறினாம். "ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழி" (5) என்பதனானும் இது வினைச்சொல்லாம். 10 | அவ்வழி, முழக்கென விடியென முன்சமத் தார்ப்ப வழக்குமாறு கொண்டு வருபுவரு பீண்டி நறையொடு துகளெழ நல்லவ ரணிநிற்பத் (6)துறையு மாலமுந் தொல்வலி மராஅமு முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழூஉ |
எ - து: அவ்விடத்து ஏறுகளைத் தழுவிப் 3போக்கும்படியை உட்கொண்டு வந்து வந்து திரண்டு மழைமுழக்கென்ன இடியென்ன நடுவானநிலத்தின்
1. "தீயி னன்ன வொண்செங் காந்தட், .........................நெருப்பி னன்ன பல்லிதழ்" மலை. 145 - 149. 2. "காயாம்பூங் கண்ணிக் கருந்துவராடையை" கலி. 108 : 10. 3. "தளிபெறு.......................பிடவமும்" என்பது பூங்குமிழென்பது முதலாகிய தன் பொருட்கேற்ற அடையடுத்து நின்ற தோராகுபெயரென்பதற்கும் (கோவையார். 1 : பேர்.) செய்தென்னும் வினையெச்சத்திற்கு நிகழ்கால வாய்பாடும் சிறுபான்மையுண்டென்பதற்கும் (தொல். வினை. சூ. 31. நச்.) உகரவீறுசிறுபான்மை நிகழ்காலம் பற்றி வருமென்பதற்கும் (இ - வி. சூ. 246.) மேற்கோள். 4. "கொடு மழைக் காற்றா தங்கட் குளிர்பெயன் மாறவெண்ணி நெடுமலை யெடுத்துக் காட்டு நெட்டிதழ்க் காந்தட் கொள்ளி" 5. பெரும்பாண். 178. 6. (அ) "யாறுங்குளனும் வேறுபல் வைப்புஞ், சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பும்" முருகு. 224 - 225. (ஆ) "ஆலமுங் கடம்பு நல்யாற்று நடுவுங், கால்வழக் கறுநிலைக் குன்றமும்பிறவு, மவ்வவை மேய வேறு (பிரதிபேதம்)1காயாம் பூக்களுமழகுகொள்ளும்படி, 2கூறிற்று. ஞெலிகோற், 3போகும்படியை யுரைகொண்டு வந்து வந்து.
|