எ - து: மதிவிரிந்தாற்போன்ற சுட்டியை நெற்றியிலேயுடைய கரிய எருது முழைஞ்சினையுடைய மலையிற்பூவாற்செய்த அழகையுடையகண்ணியையுடைய பொதுவனைத் 1துகைத்துக் குடர்சரியும்படி குத்திக் கோட்டிடைக் கொண்டு குலைப்பதனுடைய தோற்றரவைக் காணாய்; பல்லுயிரும் வருத்தத்தை அணிகின்ற ஊழிமுடிவிலே (1) பசியநிறத்தைத் தன்பாகத்தேயுடைய உருத்திரன் வருத்தத்தைச்செய்த ஏறாகிய எருமையையேறுகின்ற (2) கூற்றுவனுடைய நெஞ்சைப் பிளந்துபோகட்டு அவன் குடரைக் கூளிக்கிட்டு அவற்றின் வயிற்றை நிறைவிக்கின்றவனைப்போலும். எ - று. எருமை, 2ஆகுபெயராய்க் கூற்றுவனை உணர்த்திற்று. 27 | (3) செவிமறை நேர்மின்னு நுண்பொறி வெள்ளைக் கதனஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாடி நுதிநுனைக் கோட்டாற் குலைப்பதன் றோற்றங்கா ணாரிரு ளென்னா னருங்கங்குல் வந்துதன் றாளிற் கடந்தட்டுத் தந்தையைக் கொன்றானைத் தோளிற் றிருகுவான் போன்ம் |
எ - து: செவிமறுவாயிருக்கின்ற விளங்கும் நுண்ணிய சிவந்த பொறிகளை யுடைய ஆயர் நேர்ந்துவிட்ட வெள்ளை யெருத்தினது கோபத்தை 3அஞ்சானாய் அதன்மேலே பாய்ந்த பொதுவனை நுதியைத் துகைத்து முனையினையுடைய கோட்டாலெடுத்துக் குலைப்பதனுடைய தோற்றரவைக் காணாய்; வருதற்கரிய கங்குலிலே அரிய இருளென்று கருதானாய் வந்து துரோணாசாரியனைக் கொன்ற (4) சிகண்டியைத் தன்முயற்சியாலே வென்று கொன்று தன் தோளால், தலையைத் திருகும் 4அச்சுவத்தாமாவைப்போலும். எ - று.
கூற்றம்" நைடத. போர்புரி. 65. (இ) "கூற்றினெருமை யேறணிந்த கண்டையொலி" காசி. மணிகன்னிகை. 18. எனவும் வருதல் காண்க. 1. பசிய நிறமென்றது அந்நிறத்தையுடைய உமாதேவியாரை. 2. "சுடர்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் துண்டமதா, வுடறிய சேவடி யான்" தேவாரம். 3. (அ) "செம்மறு வெள்ளை" (ஆ) "சில்லைச் செவிமறை கொண்டவன்" கலி. 105 : 12, 107 : 6. (இ) "நுண்பொறி வெள்ளை யடர்த் தாற்கே", "பொற்பொறிவெள்ளை யடர்த்தாற்கே", "தூநிறவெள்ளை யடர்த்தாற்கு" சிலப். 17 : 4, 5, 7. 4. துரோணரைக்கொன்றவன் திட்டத்துய்மனும் வீடுமரைக்கொன்றவன் சிகண்டியுமாதலால் இங்கே சிகண்டியை யென்பது திட்டத்துய்மனை (பிரதிபேதம்)1தொகைத்து, 2ஆடூப்பெயராய்க், 3'அஞ்சானாய்த் தன்மேலே பாய்ந்த பொதுவனைத் துகைத்து முள்ளினது நுனிபோலும் முனையினையுடைய' என்பது முந்திய பதிப்பு, 4அசுவத்தாமாவைப்போலும்.
|