(1) பொருள் அளித்தலுந் தெறுதலும் புணர்ச்சியுந் தருமென எண்ணிச் சென்ற காதலரென்க. இதனாற் போந்த பொருள்(2) அருளியோர்க்கு அளித்த அறத்தாலே பேணாரை அழித்துப்பொருளைத்தேடி அப்பொருளாற் புணர்ச்சிபெறுவேனென மூன்றன்பகுதி கூறினானாயிற்று. இது தரவு. 4 (3) அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழாஅய் காடென்றா ரக்காட்டுட்
1. (அ) "அறனும் பொருளு மின்பமு மூன்று, மாற்றும் பெருமநின் செல்வம்" புறம். 28: 15 - 6. (ஆ) "வடுவிலாவையத்து மன்னிய மூன்றி, னடுவண தெய்த விருதலையு மெய்தும்" நாலடி. 114. (இ) ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு, ளேனை யிரண்டு மொருங்கு" குறள், 760. (ஈ) "பாரோர் சொலப் பட்ட மூன்றன்றே யம்மூன்று, மாராயிற் றானே யறம்பொரு ளின்பமென், றாரா ரிவற்றி னிடையதனை யெய்துவார், சீராரிருதலையு மெய்துவார்" சிறிய. 3 - 4. (உ) "ஐயமிலை யின்பமற னோடவையு மாக்கும், பொய்யில் பொரு ளேபொருள்" (ஊ) "அப்பொரு, டுன்னுங்காலைத் துன்னாதனவில்லையே" சீவக. 497, 1923. (எ) "அருள்கொண் டியற்று மறமு மறநெறி யாய்ந்த மென்பூச், சுருள்கொண்ட கோதையர் தோள்புண ரின்பமுஞ் சூழ்சுரும்பு, மருள்கொண்டு பாடு மதுமலர்ச் சோலை மயிலனையாய், பொருள்கொண் டொழியமுற் றாதென்று ஞாலம் புகலு மன்றே"........ (ஏ) "பொன் பொருட்டினால் யாவு முண்டாம்" கந்த. மாயைப். 7. 2. "நலங்கிள்ளி ;.........; அருளவல்லை யாகுமதி யருளிலர், கொடாமை வல்லராகுக, கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே" புறம். 27. என்பதும் அதன் விசேட வுரையில் 'அருளிலர் கொடாமை வல்லராகுக வென்றதனாற் பயன், அவையுடையோர் தத்தம் பகைவரை வெல்வ ராதலால் பகை யெதிர்ந்தோர் அவையிலராக வென்பதாம்' என எழுதி யிருத்தலும். "அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" புறம். 55. அறத்தினாலன்றி யமரர்க்கு மருஞ்சமங் கடத்தன், மறத்தி னாலரி தென்பது மனத்திடை வலித்தி" கம்ப. முதற்போர். 251. "காலையா தபனைத் தருமன்மா மதலை கைதொழு கடன் முடித் தருளிச், சாலையார் தழல்செய் வேள்வியந் தணர்க்குத் தானமுந் தகுவன வழங்கி, மாலையா மளவிற் றனஞ்சயன் மொழிந்த வஞ்சினம் வழுவற முடிப்பான், வேலையா ரரவப் பல பணை முழங்க வெம்முரட் சேனையோ டெழுந்தான்." வில்லி. பதினான்காம். 2. என்பவைகளும் ஈண்டு அறிதற்பாலன. 3. (அ) முதலெழுத்தொன்றுதலாகிய மோனையும் இரண்டாமெழுத்தொன் றுதலாகிய எதுகையுமுள்ள தொடை முந்துற்றமோனையாற் பெயரிட்டு
|