பக்கம் எண் :

நான்காவது முல்லை743

இது கொச்சகக் கலி.

1முல்லைக்கலி முற்றும்.


கருத்தையும் நோக்குக. ‘இதோளி’ என்னுஞ்சொல் ஒன்றே முதல் நீண்டாவது இந்நூலிற் காணப்படுகின்றது; அதோளி உதோளி யென்பன நாமறிந்த அளவில் ஓரிடத்துங் காணப்படவில்லை, வடமலை யாளமாகிய தளிச்சேரிப்பக்கத்து இப்போதும் ஒளியென்பது இடமென்னும் பொருளில் பெரியோரைச் சுட்டி உயர்சொற் கிளவியாய் வழங்குமென்ப; இச்சொற்கள் பண்டைக்காலத்தே ஈற்றிகரங்குறைந்து ளகர ஈறாயும் வழங்கின வென்பது தொல். புள்ளி. 103-ஆம் சூத்திரவுரைகளிலுள்ள உதாரணங்களால் அறியலாகும், கன்னடத்தில் அதரொள் இதரொள் என்பன அதில் இதிலென்னும் பொருளில் வழங்கு மென்பதும் இங்கே கருதத்தக்கது. அன்றியும் இக்காலத்து அவ்விடம் இவ்விடமென்னும் பொருளில் வழங்கும் அதோ இதோ என்னுஞ் சொற்களும் அதோள் இதோள் என்பவற்றின் சிதைவோஎன்றும் ஐயமுண்டாகிறது. இவற்றைப் பாகதச் சிதைவென்பாருமுளர். இவற்றுள், இதோவென்பது சிவஞானமுனிவராற் செய்யுளிலும் பல இடத்து எடுத்தாளப்படுகிறது. “மற்றிதா தோன்றுகின்ற, சோலைசூழ் வரையினெற்றி” (சீவக. 1232) என்புழி இதா வென்பது இவ்விட மென்னும் பொருளில் சிந்தாமணியிலும் வந்துள்ளது. அங்கு ‘இதா, திசைச்சொல்’ என்று இவ்வுரையாசிரியர் குறிப்பு எழுதியிருக்கிறார்.

(பிரதிபேதம்)1முல்லைப்பாட்டு முற்றும், முல்லை முற்றும்.