பக்கம் எண் :

முதலாவது பாலை87

41நலம்பெறுசுடர்நுதா லெம்மொடு நீவரி
னிலங்குமா ணவிர் (1) தூவி யன்னமென்சேக்கையுட்
(2) 1டுலங்குமான் மேலூர்தித் துயிலேற்பாய் மற்றாண்டை
2விலங்குமான் குரல்கேட்பின் வெருவுவை யல்லையோ

எ - து: நன்மையைப் பெறுகின்ற ஒளியினையுடைத்தாகிய நுதலினையுடையாய்! நீ எம்மோடு கூட வருவையாயிற் சிங்கக்கான்மேற் றைத்த தூங்குகட்டிலின் இலங்கும் மாட்சிமை விளங்கும் அன்னத்தூவியாற்செய்த மெல்லிய படுக்கையிடத்தே உறக்கத்தைப் பொருந்துகின்ற நீ பொய்யான சிங்கம் ஒழிய அக்காட்டிடத்தில் விலங்காகிய சிங்கத்தின் குரலைக் கேட்பின் அஞ்சுவையல்லையோ; எ-று.

மாட்சிமை விளங்குகின்ற தூவியையுடைய அன்னமென்பது முதற்கேற்ற அடையடுத்த ஆகுபெயர்.

துலங்கூர்தி, தூங்குகட்டில். மற்று, வினைமாற்று; வெருவரத்தக்க, பொய்ம்மானல்லாத மெய்ம்மானின் குரல்கேட்பினெனப் பொருள் தந்து நின்றது.

(18). (3) கிளிபுரை கிளவியா யெம்மொடு நீவரிற்
றளிபொழி தளிரன்ன வெழின்மேனி 3கவின்வாட
முளியரில் பொத்திய முழங்கழ லிடைபோழ்ந்த
வளியுறி னவ்வெழில் வாடுவை யல்லையோ

எ - து: கிளியையொக்கும் மொழியினையுடையாய் ! நீ எம்மோடே வருவையாயின் முகில் துளியைச் சொரியப்பட்ட தளிரையொத்த அழகினையுடைய மேனி அழகு கெடும்படி உலர்ந்த சிறுதூற்றை மறைத்த முழங்குகின்ற அழலினது நடுவை ஊடறுத்து வந்த காற்றுத் தீண்டின் அந்த அழகு கெடுவையல்லையோ; எ - று.

இவை மூன்றும், தாழிசை.


1. "மைந்துறு மடங்கற் றிண்கான் மணிவட வயிர வூச, லைந்துடன் பதஞ்செய் பஞ்சி யணையினோ டன்னத்தூவிப், பைந்துகிலனை" திருவிளை. வேல்வளை செண்டு. 49.

2. "துளங்குமா னூர்தித் தூமலர்ப்பள்ளி" மணி. 18: 48.

3. (அ) "கிளிபுரை கிளவியாய்...........வாடுவை யல்லையோ" என்பது உடன் கொண்டு பெயர்தல் வேண்டுமென்ற தோழிக்குக் காட்டது கடுமை கூறிவிடுத்ததற்கு மேற்கோள், தொல்.அகத்.சூத்திரம். 44 'ஒன்றாத் தமரினும்' இளம்.
(ஆ) "கிளிபுரை கிளவியாய்" கலி. 20:7 "மடந்தை கிளிபுரை கிளவியும்" தமிழ் நெறி. மேற்கோள்.

(பிரதிபேதம்) 1 துலங்குகால், 2 விலங்குகால், 3 தகைவாட.