பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்873

17 (1) திங்க ளரவுறிற் றீர்க்கலா ராயினுந்

தங்காதல் காட்டுவர் சான்றவ ரின்சாய

லொண்டொடி 1நோய்நோக்கிற் பட்டவென் னெஞ்சநோய்

கண்டுங்கண் ணோடாதிவ் வூர்

எ - து: சான்றோர் திங்களைப் பாம்புசென்று மறைக்குங்கால் அதனை வருத்தத்தைத் தீர்க்கமாட்டாராயினும் அதன்மேல் தமக்குள்ள காதலைக் காட்டித் துன்புறுவர்; அதுபோல இனிய மென்மையினையுடைய ஒண்டொடியது (2) நோய்செய்யும் நோக்கிலே அகப்பட்ட என்னுடைய நெஞ்சிடத்துக் காமநோயைக் கண்ணாற் கண்டுவைத்தும் இவ்வூரிலுள்ளார் அதனைத் தீர்க்கமாட்டாராயினும் (3)கண்ணோட்டமாயினுஞ் செய்தலிலர். எ-று.

21 தாங்காச் சினத்தொடு காட்டி (4) யுயிர்செகுக்கும்

(5) பாம்பு மவைப்படி லுய்யுமாம் பூங்கண்

(6) வணர்ந்தொலி யைம்பாலாள் செய்தவிக் காம

முணர்ந்து முணராதிவ் வூர்


1. (அ) ‘‘அங்கண்மதிய மரவின்வாய்ப் பட்டெனப், பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி, யேதின்மாக்களு நோவர் தோழி, யொன்று நோவாரில்லைத், தெண்கடற் சேர்ப்ப னுண்டவென் னலக்கே’’ (தொல். அகத். சூ. 3. நச். மேற்கோள்) என்பதும் (ஆ) ‘‘அழலுடைக் கடவுளை யரவு சேர்ந்தென, விழவுடை முதுநகர் விலாவிக் கின்றதே’’ (சீவக. 1092.) என்பதும் ஒப்புநோக்கற்பாலன.

2. ‘‘ஒருநோக்கு நோய்நோக்கு’’ குறள். 1091.

3. (அ) குறள். 571 - 577 - ஆம் செய்யுட்களும் (ஆ) ‘‘கண்ணுக் கணிகலங் கண்ணோட்டம்’’ திரிகடுகம். 52.
(இ) ‘‘தெற்றப் பகைவரிடர்ப்பாடு கண்டக்கான், மற்றுங்கண் ணோடுவர் மேன்மக்கள்’’ பழ. 313. (ஈ) ‘‘கண்வனப்புக் கண்ணோட்டம்’’ சிறுபஞ்ச. 9. (உ) ‘‘ஒன்று நரம்பென்கோ வொன்றாத வென்பென்கோ, வின்றசை தானென்கோ யாதென்கோ-மென்றோடையாழ்ப், பண்ணோட்டு மின்சொற் பணைத்தோளாய் சேர்ந்தவர்பாற் கண்ணோட்டமில்லாத கண்’’ (ஊ) ‘‘யாவர் வரினு மெதிரேற்குந் தெய்வமடப், பாவை யகத்திருந்தும் பாடின்றே-மேவினர்பாற்............... கண்ணோட்டமில்லாதகண்’’ பாரதம். (எ) ‘‘கண்ணுக்குப் புனைமணிப்பூண் கண்ணோட்ட மென்பதெலாங்கருணையன்றோ’’ வில்லி. அருச்சுனன்றவ. 43. என்பவைகளும் இங்கே அறிதற்பாலன.

4. ‘‘பரீஇ யுயிர்செகுக்கும் பாம்பொடும்’’ நாலடி. 220.

5. ‘‘சான்றோ, ரவைப்படிற் சாவாதாம் பாம்பு’’ பழ. 313.

(பிரதிபேதம்)1ஒர்நோக்கின்.