பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்881

மொண்ணுத லாயத்தா (1) 1ரோராங்குத் திளைப்பினு
(2) முண்ணுனை 2தோன்றாமை முறுவல்கொண் டடக்கித்தன்
கண்ணினு முகத்தினு நகுபவள் பெண்ணின்றி
யாவருந் தண்குரல் கேட்ப நிரைவெண்பன்
10 மீயுயர் தோன்ற நகாஅ நக்காங்கே
(3) பூவுயிர்த் தன்ன புகழ்சா லெழிலுண்க
ணாயிதழ் மல்க வழும்; 
13  ஒஒ! அழிதகப் பாராதே 3யல்லல் குறுகினங்
காண்பாங் கனங்குழை 4பண்பு;
15 என்று, (4) எல்லீரு மென்செய்தீ ரென்னை நகுதிரோ
நல்ல நகாஅலில் 5மற்கொலோ யானுற்ற
வல்ல லுறீஇயான் மாய மலர்மார்பு
புல்லிப் புணரப் பெறின்;
19 எல்லாநீ, உற்ற தெவனோமற் 6றென்றீரே லெற்சிதை
செய்தா னிவனென வுற்ற திதுவென
வெய்த வுரைக்கு 7முரனகத் துண்டாயிற்
(5) பைதல வாகிப் பசக்குவ மன்னோவென்
னெய்தன் மலரன்ன கண்;

1. ஓராங்கு, ஒருதன்மைப் படலென்னும் பொருள்படுவதோர் இடைச்சொல்; பதிற். 69 : 16. கலி. 12 : 18, 18 : 7, 92 : 31. புறம். 16 : 19. இச்சொல், “ஓராங்கு” என்றும் வரும்; பதிற். 31 : 2. கலி. 50 : 7. புறம். 238 : 15, 304 : 5, 326 : 11, 370 : 2.

2. ‘‘நகைமொக்கு ளுள்ளது’’ குறள். 1274.

3. (அ) ‘‘போதெழி லுண்கண் புகழ்நல னிழப்ப’’ (ஆ) ‘‘பூக்கவின் கொண்ட புகழ்சா லெழிலுண்கண்’’ கலி. 122 : 2, 131 : 4. 

4. அறிவர்(?) கேட்பத் தலைமகள் கூற்றுவந்ததற்கு, “எல்லீரு மென்செய்தீ ரென்னை நகுதிரோ’’ என்பது மேற்; தொல். செய். சூ. 196. பேர், நச்.

5. (அ) ‘‘பசந்தகண் பைதல பனிமல்க’’ கலி. 16 : 1. (ஆ) ‘‘தெரிந்துணரா நோக்கிய வுண்கண் பரிந்துணராப்
பைதலுழப்பதெவன்’’ (இ) ‘‘படலாற்றா பைத லுழக்குங் கடலாற்றாக் காமநோய் செய்தவென் கண்’’ குறள். 1172; 1175.

(பிரதிபேதம்)1ஓராங்கு, 2தோன்றாமல், 3அல்ல குறுகினும், 4பண்பு எல்லீருமென்செய்திர், 5மற்கொல்லோ, 6என்றிரேல், 7முரணகத்து.