பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி201

மயங்கினா ளென்று 1மருடிர் கலங்கன்மி
(1) னின்னுயி ரன்னாற் கெனைத்தொன்றுந் தீதின்மை
யென்னுயிர் காட்டாதோ மற்று
22(2) பழிதபு ஞாயிறே பாடறியா தார்கட்
கழியக் கதழ்வை யெனக்கேட்டு நின்னை
வழிபட் டிரக்குவேன் 2வந்தேனென் னெஞ்ச
மழியத் துறந்தானைச் சீறுங்கா லென்னை
யொழிய விடாதீமோ வென்று
27 அழிதக, (3) மாஅந் தளிர்கொண்ட 3போழ்தினா னிவ்வூரார்
தாஅந் தளிர்சூடித் தந்நலம் பாடுப
வாஅந் 4தளிர்க்கு மிடைச்சென்றார் மீடரின்
யாஅந் 5தளிர்க்குவே மன்
31நெய்த னெறிக்கவும் வல்ல னெடுமென் (4) றோட்
பெய்கரும் பீர்க்கவும் வல்ல 6னிள (5) முலைமேற்
றொய்யி லெழுதவும் வல்லன்றன் கையிற்

1. ‘‘மதுமுகத் தலர்ந்த கோதை மாற்றமைந் தற்குரைப்பாள், கொதிமுகக் குருதி வைவேற் குரிசிலோ நம்மை யுள்ளான், விதிமுக மணங்களெய்தி வீற்றிருந் தின்ப முய்ப்ப, மதிமுக மறியு நாமே வாடுவதென்னை யென்றாள்’’ சீவக. 1708.

2. (அ) ஆங்கு நெஞ்சழிதல் என்னும் மெய்ப்பாட்டுக்கு, ‘‘பழிதபு ஞாயிறே..............விடாதீமோ வென்று” என்னும் பகுதி மேற்கோள்; தொல். மெய்ப்பாட். சூ. 22; இ - வி. சூ. 580. (ஆ) ஞாயிறு முதலிய சில பொருள்கள் சொல்லுவனபோலவும் கேட்குநபோலவும் சொல்லப்படுமென்று கூறி, ‘‘பழிதபுஞாயிறே பாடறியாதார்கண்’’ என்னும் அடியை ஞாயிறு அவ்வாறே சொல்லப்படுவதற்கு மேற்கோள் காட்டினர் இளம்பூரணர்; தொல். செய். சூ. 190. ‘ஞாயிறு’

3. ‘‘மலைமாந் தளிரே’’ கலி. 142 : 47. 

4. (அ) ‘‘நற்றோ ளிழைத்த கரும்புக்கு’’ (ஆ) ‘‘தானீர்த்த கரும்பணி வாடவென், மென்றோ ணெகிழ்த்தான்’’ கலி. 64 : 19, 131 : 29 - 30.

5. இந்நூற்பக்கம் 190 : 2-ஆம் குறிப்புப் பார்க்க.

(பிரதிபேதம்)1மருடிர் கயங்கன்மின், 2வந்தனனென்னெஞ் சழிய, 3பொழுதினான், 4தளிக்குமிடை, 5தளிர்க்குமெவன், 6இனமுலைமேல்.