அவர்க்கு முகமன்கூறி அவன் இயற்கைப் புணர்ச்சியிலும் பல சூளுறவாலும் என்மனத்தைத் தேற்றிப் 1பின்னுந் தெளிவித்தவன் என்னை அணைத்து முலை யிடத்தே முயங்கினான்; அங்ஙனம் (1) முயங்கிப் பின்னர்த் தெளிவு பொய்யாம் படி கைவிட்ட கொலைத்தொழிலை வல்லவனை யான் தேடிக் காணேனோ? அவன் என்னைக் கண்டானாயினும் அவனால் யான் பெறும் பொலிவை அறிய மாட்டீர்; என அவரை நோக்கிக் கூறி, அவர் மறுமொழி கொடாமையின், ஞாயிற்றை நோக்கி, ஞாயிறே! போக்கற்க அரிய இருளைப்போக்கும் விசும் பிடத்து 2மதிதோன்றுமாறுபோல நீயும் நீருள்ளேயுந் தோன்றுவை; அங்ஙனந் தோன்றின விடத்து ஆண்டு வாழுந் தேரை இரை என்று தின்னப்படுதலைப் பரிகரித்துக் கொள்; என அதற்கு முகமன்கூறி, ஞாயிற்றை வானிடத்தே இருந்து எவ்விடமுங் காண்கின்ற நீ எனக்கு என்ன காரியஞ் செய்வை? ஒன்றுஞ் செய்யாயாயினும் இப்பொழுது எங்கேள்வன் யாதோரிடத்தே இருந்தானாயினும் எனக்குக் 3கொண்டுவந்து காட்டுவாய்; நீ காட்டாயாயின், யான் நின் கதிர் களைப் பிடித்துக்கொண்டு அவ்விசும்பிலே ஏறி அவனைப் பார்ப்பேன்; அதற்கு நீ செய்யுங்காரியம் எனக்கு அருளாத ஒப்பிலாதானை நாடி யான் பிடித்துக் கொள்ளுமளவும் ஞாயிறே! நீ குவிந்து செல்லும் பலகதிர் பகற்காலத்தோடே இவ்விடத்தே நிற்கச் சிலகதிரோடே படுவாயாக; என்றுகூறினாள். எ - று. அறிதி ரென்றது, அறியமாட்டீர் என்ற இகழ்ச்சிக்குறிப்பு. 36 | அறாஅ லின் (2) றரி (3) முன்கைக் கொட்கும் பறாஅப் பருந்தின்கட் பற்றிப் புணர்ந்தான் கறாஅ வெருமைய காடிறந்தான் கொல்லோ 4வுறாஅத் தகைசெய்திவ் வூருள்னான் கொல்லோ செறாஅ துளனாயிற் கொள்வே னவனைப் பெறா அதியா னோவே னவனையெற் காட்டிச் சுறாஅக் 5கொடியான் கொடுமையை நீயு முறாஅ 6வரைசநின் னோலைக்கட் கொண்டீ |
1. (அ) "கொலையொக்குங் கொண்டுகண் மாறல்’’ நான்மணி. (ஆ) "கொண்டுகண் மாறல் கொடுமையிற் றுவ்வாது’’ முதுமொழிக். 37. 2. ‘அரிமுன்கை’ என்பதற்கு இவ்வுரையாசிரியர் (அ) ‘அழகினையுடைய முன்கை’ என்றும் (ஆ) ‘மெல்லிய முன்கை’ என்றும் முன்பு (கலி. 54 : 3. 59 : 4.) பொருள் கூறியிருக்கிறார்; ஈண்டு அத்தொடரில் அரியென்பதைப் பண்பாகு பெயராகக் கொண்டு ‘ஐதாகிய மயிர்’ என்று பொருள் கூறுகிறார் போலும். (இ) "அரிமயிர் முன்கை’’ (பொருந. 32.) (ஈ) "அரிமயிர்த் திரண் முன்கை’’ (புறம் 11 : 1) என வருதல் இப்பொருளோடு ஒப்பு நோக்கற்பாலன. 3. "வளைமுன்கை பற்றி நலிய’’ கலி. 51 : 10.
(பிரதிபேதம்) 1பின்னும் என்னைத் தெளிவித்தவன் என்னை, 2திங்கணீருட்டோன்றுமாறு போல, 3கொடுவந்து, 4அறாத்தகை, 5கொடியாய் கொடுமையை, 6அரசாரின்.
|