(1)யாறுநீர் கழிந்தன்ன விளமைநுந் நெஞ்சென்னுந் தேறுநீ ருடையேன்யான் றெருமந்தீங் கொழிவலோ எ - து: ‘தன்னிடத்து ஊறுகின்ற நீர் அமிழ்தத்தை ஒத்தற்குக் காரணமாகின்ற எயிற்றையுடையாய்! வெஞ்சுரத்துவழி தண்ணீருண்டலை விரும்பின் (2) நீர்களில’ என்று அறத்தைக் கருதிக் கூறுகின்றவரே! யான் உம் நெஞ்சென்று சொல்லப்படுந் தெளிவுநீர்மையை யாறு நீர் கழிந்தாற்போன்ற இளமையாக உடையேனாதலால் இவ்விடத்தே சுழன்று நெஞ்சழிவேனோ? இறந்துபடுவேனே; எ - று. கழிந்த நீர்போல இளமையும் மீளாதென்பது பொருள். 15 | (3) மாணெழில் வேய்வென்ற தோளாய்நீ வரிற்றாங்கு மா(4)ணிழ 1லலவாண்டை மரமெனக் கூறுவீர் நீணிழற் றளிர்போல நிறனூழ்த்த லறிவேனுந் தாணிழல் கைவிட்டியான் றவிர்தலைச் சூழ்வலோ |
எ - து: ‘மாட்சிமைப்பட்ட அழகினையுடைய மூங்கிலை வென்ற தோளினையுடையாய்! நீ வெஞ்சுரத்தே வரில் அவ்விடத்தில் மரங்கள் நின் இளைப்பை ஆற்றும் மாட்சிமைப்பட்ட நிழலையுடையவல்ல’ என்று கூறுகின்றவரே! நீர் நீங்கினால் என் நலம் நீண்ட நிழலினின்ற தளிர்போலே வெளுத்தலை அறிந்திருப்பேனாதலால் யான் உம்முடைய திருவடியில் அருளைக் கைவிட்டு இங்கே இருத்தலைச் சூழ்வேனோ? இறந்துபடுவேனே; எ - று. வென்ற, உவமவுருபு. இவை மூன்றும், தாழிசை.
1. என வான்மீகி முனிவரும் இளமை கழிதற்கு யாற்றுநீர் கழிதலை உவமித்திருத்தல் இங்கே அறிதற்பாலது. ஸ்ரீமத் ராமாயணம். சுந். 20: 12. 2. "நன்னீர்கள் சுமந்து" திருவிருத்தம். 32. "கண்ணி னீர்கள் சொரிந்தவை" சீவக. 1391. 3. (அ) வென்ற வென்பது அருகி மெய் யுவமத்தின்கண் வந்ததற்கு "மாணெழில் வேய்வென்ற தோளாய்நீ வரிற்றாங்கும்" என்பது மேற்கோள். தொல். பொ. உவம. சூ.15. பே. (ஆ) வேய்வென்ற தோளென்பது தத்தமரபிற்றோன்றுமன் பொருளேயென்பதற்கு மேற்கோள். தொல். உவம. சூ. 17. இளம். (இ) "வேய்வென்ற தோளான்" கலி. 138: 18-9. 4. "நிழறேய்ந் துலறிய மரத்த" "மரநிழலற்ற வியவிற் சுரன்" அகம். 1: 11; 353: 13. (பிரதிபேதம்) 1 இல.
|