பக்கம் எண் :

462கலித்தொகை

(78) பன்மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை
யின்மல ரிமிர்பூதுந் துணைபுண ரிருந்தும்பி
யுண்டுறை யுடைந்தபூப் புனல்சாய்ப்பப் புலந்தூடிப்
பண்புடை நன்னாட்டுப் பகைதலை வந்தென
5வதுகைவிட் டகன்றொரீஇக் காக்கிற்பான் குடைநீழற்
பதிபடர்ந் திறைகொள்ளுங் குடிபோலப் பிறிதுமொரு
பொய்கைதேர்ந் தலமரும் பொழுதினான் மொய்தப
விறைபகை தணிப்பவக் குடிபதிப் பெயர்ந்தரங்கு
நிறைபுன னீங்கவந் தத்தும்பி யம்மலர்ப்
பறைதவிர் பசைவிடூஉம் பாய்புன னல்லூர;
11நீங்குங்கா னிறஞ்சாய்ந்து புணருங்காற் புகழ்பூத்து
நாங்கொண்ட குறிப்பிவ ணலமென்னுந் தகையோதா
னெரியிதழ் சோர்ந்துக வேதிலார்ப் புணர்ந்தமை
கரிகூறுங் கண்ணியை யீங்கெம்மில் வருவதை;
15 சுடர்நோக்கி மலர்ந்தாங்கே படிற்கூம்பு மலர்போலென்
றொடர்நீப்பிற் றொகுமிவ ணலமென்னுந் தகையோதானலர்நாணிக் கரந்தநோய் கைம்மிகப் பிறர்கூந்தன்
மலர்நாறு மார்பினை யீங்கெம்மில் வருவதை;
19 பெயினந்தி வறப்பிற் சாம் புலத்திற்குப் பெயல்போல்யான்
செலினந்திச் செறிற்சாம்பு மிவளென்னுந் தகையோதான்
முடியுற்ற கோதைபோல் யாம்வாட வேதிலார்
தொடியுற்ற வடுக்காட்டி யீங்கெம்மில் வருவதை;
ஆங்க;
24 ஐய வமைந்தன் றனைத்தாகப் புக்கீமோ
வெய்யாரும் வீழ்வாரும் வேறாகக் கையின்
முகைமலர்ந் தன்ன முயக்கிற் றகையின்றே
தண்பனி வைக லெமக்கு.

இது பரத்தையர் 1சேரியிற் சென்று வந்த தலைவனோடு ஊடிய
காமக்கிழத்திஊடறீர்கின்றாள் கூறியது.

இதன் பொருள்.


(பிரதிபேதம்) 1சேரிச்சென்று.