பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்957

நின் மனத்தால் நினைந்துபார்; இவள் தான் தன்பகைவனோடு 1சினந்த அரசன் அவன் எயிற்புறத்தே சென்றுவிட்டவினையால் (1) உழிஞையானுக்குவந்த வருத்தம்போலே வரைவு கடிதின்முடிதற்கு விரைதல் வரும் நெஞ்சத்தாலே பெரிதும் வருந்தினாள்; இனி அவ்வருத்தம் நீங்கும்படி கடிதின் வரைவாயாக என வரைவுகடாயினாள். எ - று.

இதனால், தலைவற்கு அசைவுபிறந்தது.

(2) இது சிறுமைக்கு எல்லைகூறிய நான்கடியாயின்றி மூன்றடியான்வந்த தரவும் நான்கடித்தாழிசை இரண்டும் 2ஆசிரியச்சுரிதகமும் வந்தமையால் யாப்பின் வேறுபட்ட 3பாநிலைவகைக் கொச்சகம். (32)

(150). அயந்திகழ் நறுங்கொன்றை யலங்கலந் தெரியலா
னியங்கெயி லெயப்பிறந்த வெரிபோல வெவ்வாயுங்
கனைகதிர் தெறுதலிற் கடுத்தெழுந்த காம்புத்தீ
மலைபரந்து தலைக்கொண்டு முழங்கிய முழங்கழன்
மயங்கதர் மறுகலின் மலைதலைக் கொண்டென
விசும்புற நிவந்தழலும் விலங்கரு வெஞ்சுரம்;
7. இறந்துதா மெண்ணிய வெய்துதல் வேட்கையா
லறந்துறந் தாயிழா யாக்கத்திற் பிரிந்தவர்;
பிறங்குநீர் சடைக்கரந்தா னணியன்ன நின்னிறம்
பசந்துநீ யினையையாய் நீத்தலு நீப்பவோ;
11. கரிகாய்ந்த கவலைத்தாய்க் கல்காய்ந்த காட்டகம்
வெருவந்த வாறென்னார் விழுப்பொருட் ககன்றவ
ருருவவேற் றூர்தியா னொள்ளணிநக் கன்னநின்
னுருவிழந் தினையையா யுள்ளலு முள்ளுபவோ; 
15.கொதித்துராய்க் குன்றிவர்ந்து கொடிக்கொண்ட கோடையா
லொதுக்கரிய நெறியென்னா ரொண்பொருட் ககன்றவர்

1. இந்நூற்பக்கம் 871 : 6 -ஆம் குறிப்புப்பார்க்க.

2. இச்செய்யுளை இளம்பூரணர் தரவின்றாகித் தாழிசைபெற்றுவரும் கொச்சகவொருபோ கென்றுகூறி, "நிரைதிமில்..........சேர்ப்பகேள்’ இது நான்கடியாகி வாராமையிற் றாழிசையாயிற்று. கற்பித்தான்.............. விடாதேகாண்’ ‘கேளிர்கள்............விடாதே காண்' இவையிரண்டும் தாழிசை. 'ஆங்கு,...........................பெரிதே’ இது சுரிதகம்’’ என்று விளக்குவார்; தொல். செய். சூ. 142. ‘தரவின் றாகித்’.

(பிரதிபேதம்)1சினத்தஅரசன், 2ஐயடிச்சுரிதகமும், 3பாவகை நிலைக் கொச்சகம்.