7. மு. புறநா. 209 : 3. 10 - 21. கலிங்கம் - ஒருவகை நல்லாடை. “நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந், தரவுரி யன்ன வறுவை” (பொருந. 82 - 3) ; “காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇ” (சிறுபாண். 236) ; “கண்பொரு புகூஉ மொண்பூங் கலிங்கம்” (மதுரைக். 433) 9-11. காம்பின் கழை படு சொலியின் - மூங்கிலாகிய கோலின் உட்புறத்தே பெயர்த்தெடுக்கப்படும் வெள்ளிய தோல்போல. இழையணி வாரா -நெய்யப்பட்டுள்ள இழைகளின் வரிசை கண்ணுக்குப் புலப்படாத. சொலி : கலிங்கத்திற்கு உவமை. 12. வசிந்து - தலைவனை வயமாக்கி. உந்தி - கொப்பூழ் 16. அழித்து - மீட்டும். 17. படர்பு - செல்லுதல். 18. மறி - ஆட்டுக்குட்டி.20. ஊகம் - ஒருவகைக் குரங்கு. 21. அவியன் - ஓர் உபகாரி ; “களிமலி கள்ளி னற்றே ரவிய, னாடிய விளமழை சூடித் தோன்றும், பழந்தூங்கு விடரகம்” (அகநா. 271 : 12 - 4) 23. அறான் - மேற்கூறிய தலைவன் தனது நிலைமை குன்றான். வெள்ளியதுநிலை எவன்பரிகோ - சுக்கிரனுடைய நிலைமைக்குச் சிறிதும் வருந்தேன் ; புறநா. 384 : 20, 386 : 24. (383) 384 | மென்பாலா னுடனணைஇ வஞ்சிக்கோட் டுறங்குநாரை அறைக்கரும்பின் பூவருந்தும் வன்பாலாற் கருங்கால்வரகி | 5 | ........................ னங்கட் குறுமுயல் வெருவ வயல கருங்கோட் டிருப்பைப் பூவுறைக் குந்து விழவின் றாயினு முழவர் மண்டை இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து | 10 | ..................... துணையேம் பெரும நெல்லென்னா பொன்னென்னா கனற்றக்கொண்ட நறவென்னா .......................மனையென்னா வவைபலவும் யான்றண்டவுந் தான்றண்டான் | 15 | நிணம்பெருத்தகொழுஞ்சோற்றிடை மண்ணாணப் புகழ்வேட்டு நீர்நாணநெய்வழங்கிப் |
|