| 
 (கு - ரை.)   1. கடிப்பு - குறுந்தடி. 3. உரறுபு சிலைப்ப - மிகமுழங்க. 1 - 3. மேக முழக்கிற்கு முரசு உவமை ; புறநா. 58 : 6 - 7, குறிப்புரை.  கலித்.  45 : 3 - 5,  குறுந். 270 : 3;  நற். 197 :10. 4.  புறநா. 18 : 4, 363 - 2 - 3. 5. "தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே" (புறநா. 165 : 1-2) 6. செம்மால் - செம்மலே ; தலைவனே. 9. ஊற்றம் - வலி.  10. தெரியா - தெரிந்து. 11. பகற்காலத்தை முயற்சிக்கு உதவி. 12. வருவது - பின்வருங் காரியத்தை. 14. உழுத பெரிய பகடு வைக்கோலைத் தின்றாற்போல; "உழுத நோன்பக டழிதின் றாங்கு" (புறநா. 125 : 7) 15. அளைஇ - கலந்து.  16. கட்டேறல் - கள்ளின் தெளிவை. 18. இடை - சமயம். அருகாது - குறையாமல். 19. அவிழ் - சோற்றுப்பருக்கை. 20. விடை - ஆட்டுக்கிடாய் ;  புறநா. 364 : 4. சூடு - சூட்டிறைச்சி. 23. மடங்கல் - யமன்;  மு. புறநா. 363 : 9. (366) |