| திணை - அது; துறை - இயன்மொழி. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை  நெட்டிமையார் பாடியது. (இ - ள்.)  பாணர்  பொற்றாமரைப் பூவைச் சூடவும், புலவர் பட்டம்  பொலிந்த மத்தகத்தையுடைய யானையுடனே  அலங்கரிக்கப்பட்ட தேரினை ஏறுதற்கேற்ப  அமைக்கவும், அறனோ இவ்வாறு செய்தல்? வென்றி  மாட்சிமைப்பட்ட குடுமி ! வேற்றரசருடைய நிலத்தை  அவர்க்கு இன்னாவாகக் கொண்டு நின்னுடைய  பரிசிலரிடத்து இனியவற்றைச் செய்வை - எ - று. குடுமி ! பிறர்மண்  இன்னாவாகக்கொண்டு, மலையவும் பண்ணவும் நின்  ஆர்வலர் முகத்து இனியசெய்வை; இது நினக்கு அறனோ?  சொல்லு வாயாகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. மற்று : அசைநிலை. இது பழித்ததுபோலப்  புகழ்ந்ததாகக் கொள்க. |