பக்கம் எண் :

134

சிறையும், தீ மிகின் நிழலும், காற்று மிகின் வலியும் இல்லாதவாறு போல, நீ
மிக்கெழின் எதிர்ந்துய்யும் வேந்தர் பிறரில்லை; எவரேனும் உளராயின்,
அவர் வாழ்வும் அரணும், ஈயலும் அதன் புற்றும் போலச் சிறிது போதிற்
கெடுதல் திண்ணம்” என இப் பாட்டின்கண் புகழ்ந்து பாராட்டுகின்றார்.

நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்
மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை
வளிமிகின் வலியு மில்லை யொளிமிக்
கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி
5. தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் போரெதிர்ந்து
கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே
அளியரோ வளியரவ னளியிழந் தோரே
நுண்பல சிதலை யரிதுமுயன் றெடுத்த
10. செம்புற் றீயல் போல
ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே. (51)

     திணை: வாகை. துறை: அரசவாகை. பாண்டியன் கூடகாரத்துத்
துஞ்சிய மாறன் வழுதியை ஐயூர் முடவனார் பாடியது.

     உரை: நீர் மிகின் சிறையு மில்லை - நீர் மிகுமாயின் அதனைத்
தாங்கும் அரணு மில்லை; தீ மிகின் மன்னுயிர் நிழற்றும் நிழலும்
இல்லை - நெருப்பு மிகுமாயின் உலகத்து நிலை பெற்ற உயிர்களை
நிழல் செய்யும் நிழலுமில்லை; வளி மிகின் வலியும் இல்லை - காற்று
மிகுமாயின் அதனைப் பொறுக்கும் வலியு மில்லை; ஒளி மிக்கு -
விளக்கம் மிக்கு; அவற்றோர் அன்ன சினப் போர் வழுதி -
அவற்றை யொத்த சினம் பொருந்திய போரையுடைய வழுதி;
தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் - குளிர்ந்த தமிழ்நாடு
மூவேந்தர்க்கும் பொது வென்று கூறப் பொறானாய்; போரெதிர்ந்து -
போரை யேற்று; கொண்டி வேண்டுவனாயின் - திறையை
வேண்டுவனாயின்; கொள்க எனக் கொடுத்த மன்னர் நடுக்கற்றனர் -
கொள்க வென்று சொல்லி முன்னே கொடுத்த மன்னர் நடுக்கம்
தீர்ந்தார்; அளியரோ அளியர் - கொடாமையின் யாவராலும் மிக
இரங்கத்தக்கார்; அவன் அளியிழந்தோர் - அவனது அருளை யிழந்த
அரசர்; நுண் பல சிதலை - நுண்ணிய பல கறையான்; அரிது
முயன்று எடுத்த - அரிதாக உழந்தெடுக்கப்பட்ட; செம்புற் றீயல்
போல - செம்புற்றினின்றும் புறப்பட்ட ஈயலைப்போல; ஒரு பகல்
வாழ்க்கைக்கு உலமருவோர் ஒரு - பகற் பொழுதின்கண் வாழும்
உயிர்வாழ்க்கையின் பொருட்டுச் சுழல்வோர் எ-று.