| | மன்னுக பெரும நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா | 10 | தாத னின்னகத் தடக்கிச் | | சாத னீங்க வெமக்கீத் தனையே. (91) |
திணை: பாடாண்டிணை. துறை: வாழ்த்தியல். அவனை அவர் நெல்லிப் பழம் பெற்றுப் பாடியது.
உரை: வலம்படு வாய் வாள் ஏந்தி - வென்றியுண்டான தப்பாத வாளை எடுத்து; ஒன்னார் களம் படக் கடந்த - பகைவர் களத்தின்கட்பட வென்ற; கழல் தொடித் தடக்கை - கழல விடப்பட்ட வீர வளை பொருந்திய பெரிய கையினையுடைய; ஆர் கலி நறவின் அதியர் கோமான் - மிக்க ஆரவாரத்தைச் செய்யும் மதுவினையுடையஅதியர் கோமான்; போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி - மாற்றாரைப் போரின்கட் கொல்லும் வீரச் செல்வத்தினையும் பொன்னாற் செய்யப்பட்ட மாலையையுமுடைய அஞ்சி; பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி - நீ பால் போலும் பிறை நுதல் போலப் பொலிந்த திருமுடியினையும்; நீலமணி மிடற்று ஒருவன் போல - நீலமணிபோலும் கரிய திருமிடற்றினையுமுடைய ஒருவனைப்போல; மன்னுக - நிலைபெறுவாயாக; பெரும நீயே - பெரும நீ; தொல் நிலை பெருமலை விடரகத்து - பழைய நிலைமையையுடைய பெரிய மலையிடத்து விடரின் கண்; அருமிசைக்கொண்ட - அரிய உச்சிக்கட் கொள்ளப்பட்ட; சிறி யிலை நெல்லித் தீங்கனி - சிறிய இலையினையுடைய நெல்லியின் இனிய பழத்தை; குறியாது ஆதல் நின் அகத்து அடக்கி - பெறுதற் கரிதென்று கருதாது அதனாற் பெறும் பேற்றினை எமக்குக் கூறாது நின்னுள்ளே அடக்கி; சாதல் நீங்க எமக்கு ஈத்தனை - சாதலொழிய எமக்கு அளித்தாய் ஆதலால் எ-று.
நீலமணி மிடற் றொருவன்போ லென்ற கருத்து, சாதற்குக் காரணமாகிய நஞ்சுண்டும் நிலைபெற்றிருந்தாற்போல, நீயும் சாவாதிருத்தல் வேண்டும் என்பதாம். அதியர் கோமான், அஞ்சி நெல்லித் தீங்கனி, எமக்கு ஈத்தாயாதலால், பெரும, நீ நீலமணி மிடற்றொருவன் போல மன்னுக வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. பிறைநுதற் பொலிந்த சென்னி என்பதற்குப் பிறைதான் நுதலிடத்தே பொலிந்த சென்னி யெனினு மமையும்.
விளக்கம்: வில்லும் வாளும் வேலும் ஏந்தி நிற்கும் வீரர்க்குத் தொடி செறிய அணியப்படின் இடையூறு செய்யுமாதலின், இனிது கழல இடப்பட்ட தென்றற்குக் கழல் தொடிஎன்றார். தொடி கழல விடப்பட்ட தாயினும் கைபெருமை குறைந்த தன்றென்றற்கு, தடக்கையெனப்பட்டது. போர் அடு திரு - போரின்கட் பகைவர்களைக் கொல்லும் |
|
|
|