| கழற்கனி வகுத்த துணைச்சில் லோதிக் குறுந்தொடி மகளிர் தோள்விடல் | 25 | இறும்பூ தன்றஃ தறிந்தா டுமினே. (97) |
திணையும் துறையு மவை. அதியமா னெடுமான் அஞ்சியை அவர்பாடியது.
உரை: போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள் - போரைச் செய்தற்குப் புடை பெயர்ந்து உலாவி விரும்பி உறை கழித்த வாள்கள்தாம்; உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின் - பகைத்தவரது காவலையுடைய அரணை யழித்தலால்; ஊன் உற மூழ்கிஉரு இழந்தன - அவர் தசையின்கண்ணே உறக்குளித்துக் கதுவாய் போய் வடி விழந்தன; வேல் - அவன் வேல்கள்தாம்; குறும்பு அடைந்த அரண் கடந்து - குறும்பர் சேர்ந்த அரண்களை வென்று; அவர் நறுங் கள்ளின் நாடு நைத்தலின் - அப்பகைவரது நறிய மதுவையுடைய நாட்டை யழித்தலால்; சுரை தழீஇய இருங் காழொடு - சுரையோடு பொருந்திய கரிய காம்புடனே; மடை கலங்கி நிலை திரிந்தன - ஆணி கலங்கி நிலைகெட்டன; களிறு - அவன் களிறுதாம்; எழூஉத் தாங்கிய கதவு மலைத்து - கணைய மரத்தால் தடுக்கப்பட்ட கதவைப் பொருது; அவர் குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின் - அப்பகைவரது திரண்ட களிற்றையுடைய அரணை யழித்தலால்; பரூஉப் பிணிய தொடி கழிந்தன - பரிய பிணித்தலை யுடையவாகிய கிம்புரிகள் கழன்றன; மா - அவன் குதிரைதாம்; பரந்து- பரந்து வந்து; ஒருங்கு மலைந்தவர் - ஒக்கப் பொருத வீரரது; பொலம் பைந்தார் கெட - பொன்னாற் செய்யப்பட்ட பசிய மாலையையுடைய மார்பு உருவழிய; பரிதலின் - ஓடுதலால்; களன் உழந்து அசைஇய மறுக் குறும்பின - போர்க்களத்தின்கட் பொருது வருந்திய குருதியான் மறுப்பட்ட குளம்பை யுடையவாயின; அவன் தானும்-; நிலம் திரைக்கும் கடல் தானை - நிலவகலத்தைத் தன்னுள்ளே யடக்கும் கடல்போன்ற படையுடனே; பொலந் தும்பை - பொன்னானியன்ற தும்பைக் கண்ணியையுடைய; கழல் பாண்டில் கணை பொருத துளைத் தோலன் - கழல் வடிவாகவும் கிண்ணி வடிவாகவும் செய்து செறிக்கப்பட்டு அம்பு படுதலால் துளைபட்ட பரிசையை யுடையன்; ஆயிடை - அவ்விடத்து; உடன்றோர் உய்தல் யாவது - அவனால் வெகுளப்பட்டோர் பிழைத்தல் எங்கே யுளது; தடந்தாள் பிணிக் கதிர் நெல்லின் செம்மல் மூதூர் - பெரிய தாளினையும் ஒன்றோடொன்று தெற்றிக் கிடக்கின்ற கதிரினையு முடைத்தாகிய நெல்லினையுடைய தலைமை பொருந்திய பழைய வூர்; நுமக்கு உரித்தாகல் வேண்டின் நுங்கட்கு |