இருபத்தையாண்டு அரசு புரிந்தானென்ப. இவனைப் பாடிய கபிலர் சங்கத்தொகை நூல்களில் உள்ள பல பாட்டுக்களைப் பாடியவர். வேள்பாரியின் உயிர்த்தோழர்.இவரால் சிறப்பிக்கப்பட்ட வள்ளல்களும் வேந்தர்களும் பலர்.இவர் பாண்டிநாட்டில் பிறந்த அந்தணர்.குறிஞ்சித் திணை பாடுவதில் நிகரற்றவர். இப்பாட்டின்கண், ஞாயிற்றை நோக்கி, வீங்கு செலல் மண்டிலமே! நீ பகற்போதை நினக்கென வரைந்து கொள்வாய்; திங்களுக்குப் புறங்கொடுக்கின்றாய்; தெற்கினும் வடக்கினும் மாறி மாறி வருகின்றாய்; மலைவாயில் மறைகின்றாய்; பகற்போதிற்றான் தோன்றுவாய்;இத்தனை குறைபாடுடைய நீ சேரலாதனை ஒப்பதென்பது நினக்கு ஆகாது என்று பழிப்பது போலச் சேரமானைப் பாராட்டுகின்றார்.
| வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅ திடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப ஒடுங்கா வுள்ளத் தோம்பா வீகைக் | 5. | கடந்தடு தானைச் சேர லாதனை | | யாங்கன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம் பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி மாறி வருதி மலைமறைந் தொளித்தி அகலிரு விசும்பி னானும் | 10. | பகல்விளங் குதியாற் பல்கதிர் விரித்தே. (8) | திணை : பாடாண்டிணை. துறை: இயன்மொழி; பூவை நிலையுமாம். சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது.
உரை: வையங் காவலர் வழிமொழிந் தொழுக - உலகத்தைக் காக்கு மரசர் வழிபாடு சொல்லி நடக்க; போகம் வேண்டி - நுகரும் இன்பத்தை விரும்பி; பொதுச்சொற் பொறாஅது -பூமி பிற வேந்தருக்கும் பொது வென்னும் வார்த்தைக்குப் பொறாஅது;இடம் சிறிதென்னும் ஊக்கம் துரப்ப - தன் நாடு இடம் சிறிது என்னும் மேற்கொள் செலுத்த; ஒடுங்கா உள்ளத்து -மடியாதவுள்ளத்தையும்; ஓம்பா ஈகை - பொருளைப் பாதுகாவாது வழங்கும் வண்மையையும்; கடந்து அடு தானைச் சேரலாதனை - வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் படையையுமுடைய சேரலாதனை; வீங்கு செலல் மண்டிலம் - மிக்க செலவையுடைய மண்டிலமே; யாங்கனம் ஒத்தி - எவ்வாறொப்பை; பொழுது என வரைதி - நீ பகற்பொழுதை நினக்கெனக் கூறுபடுப்பை; புறக்கொடுத்து இறத்தி - திங்கள் மண்டிலத்திற்கு முதுகிட்டுப் போதி; மாறி வருதி - தெற்கும் வடக்குமாகிய இடங்களில் மாறிமாறி வருவை; மலை மறைந்து ஒளித்தி
|