பக்கம் எண் :

286

 
 திடைப்புரைப்பற்றிப் பிணிவிடாஅ
ஈக்குழாத்தோ டிறைகூர்ந்த
5பேஎற்பகையென வொன்றென்கோ
 உண்ணாமையி னூன்வாடித்
தெண்ணீரிற் கண்மல்கிக்
கசிவுற்றவென் பல்கிளையொடு
பசியலைக்கும் பகையொன்றென்கோ
10அன்னதன்மையு மறிந்தீயார்
 நின்னதுதாவென நிலைதளர
மரம்பிறங்கிய நளிச்சிலம்பிற்
குரங்கன்னபுன் குறுங்கூளியர்
பரந்தலைக்கும் பகையொன்றென்கோ
15 ஆஅங், கெனைப்பகையு மறியுநனாய்
 எனக்கருதிப் பெயரேத்தி
வாயாரநின் னிசைநம்பிச்
சுடர்சுட்ட சுரத்தேறி
இவண்வந்த பெருநசையேம்
20 எமக்கீவோர் பிறர்க்கீவோர்
 பிறர்க்கீவோர் தமக்கீபவென
அனைத்துரைத்தனன் யானாக
நினக்கொத்தது நீநாடி
நல்கினை விடுமதி பரிசி லல்கலும்
25தண்புனல் வாயிற் றுறையூர் முன்றுறை
 நுண்பல மணலினு மேத்தி
உண்குவம் பெருமநீ நல்கிய வளனே.
 (136)   

  திணை : அது. துறை : பரிசில்கடாநிலை. அவனைத் துறையூர்
ஓடைகிழார் பாடியது.

    உரை : யாழ்ப் பத்தர் புறம் கடுப்ப - யாழ்ப் பத்தரினது
புறத்தை யொப்ப; இழை வலந்த பல் துன்னத்து - இழை சூழ்ந்த பல
தையலினது; இடைப் புரை பற்றி - இடைக்கண் உளவாகிய
புரைகளைப் பற்றி; பிணிவிடாஅ ஈர்க் குழாத்தோடு -
ஒன்றோடொன்று தொடர்ந்த பிணிப்பு விடாதே கிடைக்கின்ற
ஈரினது திரளோடு; இறை கூர்ந்த பேஎன் பகையென ஒன்று என்கோ
- தங்குதல் மிக்க பேனாகிய பகையை ஒரு பகை யென்பேனோ;
உண்ணாமையின் ஊன் வாடி - உண்ணாமையின் உடம்பு புலர்ந்து;
கண் தெண்ணீரின் மல்கி - கண் தெளிந்த நீரால் நிறைந்து;