மேற்கொள்ளாமையும், குற்றஞ்செய்தாரை நன்காராய்ந்து ஒறுத்தலும், அடியடைந்தாரை ஏற்றலும், மனைவாழ்வில் இன்புறுதலும் உடையனாய், முன்செய்து பின்னிரங்காவினையும் நாடு முழுதும் பரந்த நல்லிசையும் கொண்டு சிறப்பது கண்டு மகிழ்ந்து புகழ்கின்றார். | வழிபடு வோரை வல்லறி தீயே பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே நீமெய் கண்ட தீமை காணின் ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி | 5. | வந்தடி பொருந்தி முந்தை நிற்பிற் | | றண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே அமிழ்தட் டானாக் கமழ்குய் யடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை மகளிர் மலைத்த லல்லது மன்னர் | 10. | மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப | | செய்திரங் காவினைச் சேண்விளங் கும்புகழ் நெய்தலங் கான னெடியோய் எய்தவந் தனம்யா மேத்துகம் பலவே. (10) | திணையும் துறையும் அவை. சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
உரை:வழிபடுவோரை வல் அறிதி - நின்னை வழிபட்டொழுகு வோரை விரைய அறிவை; பிறர் பழி கூறுவோர் மொழி தேறலை - பிறருடைய குற்றம் சொல்லுவாரது வார்த்தையைத் தெளியாய்; நீ மெய்கண்ட தீமை - நீ மெய்யாக மனத்தான் ஆராய்ந்து அறுதியிடப்பட்ட கொடுமையை; காணின் - ஒருவன்பாற் காணின்; ஒப்ப நாடி - அதனை நீதிநூற்குத் தக ஆராய்ந்து; அத் தக ஒறுத்தி - அத் தீமைக்குத் தகத் தண்டம் செய்வை; வந்து அடி பொருந்தி - வந்து நின் பாதத்தையடைந்து; முந்தை நிற்பின் முன்னே நிற்பாராயின்;பண்டையிற் பெரிது நீ தண்டமும் தணிதி - அவர் பிழை செய்வதற்குமுன் நீ செய்யும் அருளினும் அருள் பெரிதாக அவரைச் செய்யுந் தண்டமும் தணிவை; அமிழ்து அட்டு - அமிழ்தத்தைத் தன் சுவையால் வென்று; ஆனா - உண்ணவுண்ண வமையாத; கமழ் குய் யடிசில் - மணங்கமழும் தாளிப்பையுடைய அடிசிலை; வருநர்க்கு வரையா - விருந்தினர்க்கு மிகுதி குறைபடாமல் வழங்கும்; வசையில் வாழ்க்கை -பழி தீர்ந்த மனை வாழ்க்கையையுடைய;மகளிர் மலைத்தல் அல்லது - பெண்டிர் முயக்கத்தால்மாறுபடுத்தலல்லது; மள்ளர்
|