பக்கம் எண் :

302

 

உடனே  யாங்கள்  அவரைத்   தொழுது  ‘நீவிர்  எம் தலைவனாகிய
பேகனுக்குக்  கிளைமை  யுடையீரோ’ வென வினவினேம்; அவர் தம்
கண்ணீரைத்  துடைத்துக்  கொண்டு,   ‘யாம்  அவன்  கிளைஞரல்லேம்;
எம்போல்வாள் ஒருத்தியின் நலத்தை விழைந்து நாடோறும்  அவளுறையும்
நல்லூர்க்குத் தேரேறி வந்து போகின்றா னெனப் பலரும் கூறாநிற்பர்’
என்று உரைத்தார். ஆதலால், அவரை, நீ அருளாயாதல் கொடிதுகாண்”
என்ற பொருளமையப் பாடியுள்ளார்.

 அருளா யாகலோ கொடிதே யிருள்வரச்
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின்
காரெதிர் கானம் பாடினே மாக
நீனறு நெய்தலிற் பொலிந்த வுண்கண்
5கலுழ்ந்துவா ரரிப்பனிபூணக நனைப்ப
 இனைத லானா ளாக இளையோய்
கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென
யாந்தற் றொழுதலும் வினவக் காந்தள்
முகைபுரை விரலிற் கண்ணீர் துடையா
10யாமவன் கிளைஞரே மல்லேங் கேளினி
 எம்போ லொருத்தி நலனயந் தென்றும்
வரூஉ மென்ப வயங்குபுகழ்ப் பேகன்
ஒல்லென வொலிக்குந் தேரொடு
முல்லை வேலி நல்லூ ரானே.
    (144)

     திணையுந் துறையும் அவை. அவனை யவள் காரணமாகப்
பரணர் பாடியது.

     உரை : அருளா யாகல் கொடிது - அருள் பண்ணாயாதல்
கொடிது; இருள் வர - மாலைக் காலம் வந்த அளவிலே; சீறியாழ்
செவ்வழி பண்ணி - சிறிய யாழை இரங்கற் பண்ணாகிய செவ்வழி
யென்னும்  பண்ணிலே  வாசிக்கும்  பரிசு  பண்ணி;  நின் காரெதிர்
கானம் பாடினேமாக - நினது மழையை யேற்றுக் கொண்ட
காட்டைப் பாடினேமாக;    நீல்நறு  நெய்தலிற்  பொலிந்த
உன்கண் - நீல நறுநெய்தல்போன்று  பொலிந்த மையுண்ட கண்கள்;
கலுழ்ந்து வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப - கலங்கி வீழ்ந்த
இடைவிட்ட துளிகள் பூணையுடைய மார்பை நனைப்ப; இனைதல்
ஆனாளாக - வருந்துதல் அமையா ளாக; இளையோய் கிளையை
மன் எம் கேள் வெய்யோற்கு என - இளையோய்,
கிளைமையையுடையையோ எம்முடைய கேண்மையை
விரும்புவோனுக்கென; யாம் தன் தொழுதனம் வினவ - யாங்கள்
தன்னை வணங்கிக் கேட்டேமாக; காந்தள் புரை விரலின் கண்ணீர்
துடையா - அவள் காந்தள் மொட்டுப்போலும்  விரலாலே தன்
கண்ணீரைத் துடைத்து; யாம் அவன்  கிளைஞரேம்  அல்லேம் -
நாங்கள்   அவனுடைய கிளைஞரேமல்லேம்;