| இரும்பே ரொக்கலோடு தின்மெனத் தருதலின் அமிழ்தின் மிசைந்து காய்பசி நீ்ங்கி |
15 | நன்மர னளிய நறுந்தண் சாரற் |
| கன்மிசை யருவி தண்ணெனப் பருகி விடுத்த றொடங்கினே னாக வல்லே பெறுதற் கரிய வீறுசா னன்கலம் பிறிதொன் றில்லைக் காட்டுநாட் டேமென |
20 | மார்பிற் பூண்ட வயங்குகா ழாரம் |
| மடைசெறி முன்கைக் கடகமோ டீத்தனன் எந்நா டோவென நாடுஞ் சொல்லான் யாரீ ரோவெனப் பேருஞ் சொல்லான் பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே |
25 | இரும்புபுனைந் தியற்றாப் பெரும்பெயர்த்தோட்டி |
| அம்மலை காக்கு மணிநெடுங் குன்றிற் பளிங்குவகுத் தன்ன தீநீர் நளிமலை நாட னள்ளியவ னெனவே. (150) |