உரை: உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த - உட்குப் பொருந்திய ஞாயிற்றினது ஒள்ளிய சுடர் தின்னப்பட்ட; முளி புல் கானம் குழைப்ப - முளிந்த புல்லையுடைய காடு தளிர்ப்ப; கல்லென அதிர் குரல் ஏயொடு துளிசொரிந் தாங்கு - கல்லென ஓசையுண்டாக நடுக்கத்தைச் செய்யும் ஓசையையுடைய உரு மேற்றுடனே கூடித் துளியைப் பொழிந்தாற்போல; பசி தினத்திரங்கிய கசிவுடை யாக்கை - பசி தின்னப்பட்டு உலர்ந்த வேர்ப்புடைய உடம்பு; அவிர் புகுவு அறியாதாகலின் - அவிழ் புகுவதறியாதாகலால்; வாடிய நெறி கொள் வரிக் குடர் குளிப்ப - வாட்டமுற்ற முடக்கங்கொண்ட வல வரியையுடைய குடர் தன் கண்ணே மூழ்கும் பரிசு குளிர; குய் கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில் - தாளிப்புச் சேரப்பட்ட கொழுவிய துவையோடு கூடிய நெய்யுடைய அடிசிலை; மதி சேர் நாண் மீன் போல - திங்களைச் சேர்ந்த நாளாகிய மீனை யொப்ப; நவின்ற சிறுபொன் நன்கலம் சுற்ற இரீஇ - பயின்ற பொன்னாற் செய்யப்பட்ட சிறிய நல்ல கலங்களைச் சூழ வைத்திருத்தி யூட்டி; கேடின்றாக பாடுநர் கடும் பென - கேடு இல்லையாகப் பாடுவாரது சுற்றம் எனச் சொல்லி; அரிது பெறு பொலங்கலம் எளிதினின் வீசி - பெறுதற்கரிய பொன்னாற் செய்யப்பட்ட அணிகலங்களை யெளிதாக வழங்கி; நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன் - தன்னுடைய நட்டோரினும் எம்மோடு நட்புச் செய்த நல்ல புகழையுடைய குமணன்; மட்டார் மறுகின் முதிரத்தோன் - மது நிறைந்த தெருவினையுடைய குமணன்; மாட்டார் மறுகின் முதிரத்தோன் - மது நிறைந்த தெருவினையுடைய முதிரமென்னும் மலையிடத்தான்; செல்குவை யாயின் பெரிது நல்குவன் என - நீ அவன்பாற் செல்வையாயின் நினக்கு மிகவுந் தருவ னென; பல் புகழ் நுவலுநர் கூற - நினது பல புகழையும் சொல்லுவார் சொல்ல; வல் விரைந்து உள்ளம் துரப்ப வந்தனென் - அதுகேட்டுக் கடிதாக விரைந்து எனது உள்ளம் செலுத்துதலான் வந்தேன்; இல் உணா துறத்தலின் - எனது மனை உண்ணப்படுவனவற்றைக் கைவிடுதலான்; எள்ளுற்று இல் மறந்து உறையும் - அம் மனையை யிகழ்ந்து நினையாது உறைகின்ற; புல்லுளைக் குடுமிப் புதல்வன் - புல்லிய உளைமயிர்போலும் குடுமியை யுடைய புதல்வன்; பன் மாண் பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன் - பல படியும் பாலில்லாத வறுவிய முலையைச் சுவைத்துப் பால் பெறானாய்; கூழும் சோறும் கடைஇ - கூழையும் சோற்றையும் வேண்டி முடுகி; ஊழின் - முறை முறையே; உள்ளில் வறுங்கலம் திறந்து அழக்கண்டு - உள்ளொன்றில்லாத வறிய அடுகலத்தைத் திறந்து - அங்கு ஒன்றும் காணாது அழ அதனைப் பார்த்து; மறப் புலி உரைத்தும் - மறத்தையுடைய புலியை வரவு சொல்லி அச்ச முறுத்தியும்; |