பக்கம் எண் :

362

 
 வடிநவி லம்பின் வில்லோர் பெரும
கைவள் ளீகைக் கடுமான் கொற்ற
வையக வரைப்பிற் றமிழகங் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய வேத்திப்
20பாடுப வென்ப பரிசிலர் நாளும்
 ஈயா மன்னர் நாண
வீயாது பரந்தநின் வசையில்வான் புகழே.
(168)

     திணை: பாடாண்டிணை. துறை: பரிசிற்றுறை: இயன்மொழியும்,
அரசவாகையுமாம். பிட்டங்கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளை
சாத்தனார் பாடியது.

     உரை: அருவி   ஆர்க்கும்  கழை  பயில் நனந்தலை -
அருவி ஒலித்திழியும் வேய் பயின்ற அகன்றவிடத்து; கறி வளர்
அடுக்கத்து - மிளகு  கொடி வளரும் மலைச்சாரலினிடத்து; மலர்ந்த
காந்தள் கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி - மலர்ந்த காந்தளினது
கொழுவிய கிழங்கு   பிறழக்கிளறி;  கிளையொடு - தன்
இனத்தோடே கூட; கடுங்கண் கேழல் உழுத பூழி -
தறுகண்மையையுடைய கேழல் உழுத புழுதிக்கண்ணே; நன்னாள் வரு
பதம் நோக்கி - நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்து; குறவர்
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை - குறவர் அந்நிலம்
உழாதே அதுவே யுழவாக வித்திய பரிய தோகையையுடைய சிறிய
தினை; முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்  - முற்பட
விளைந்த புதுவருவாயாகிய கதிரை நல்ல நாளின்கண்ணே புதிதுண்ண
வேண்டி; மரையான் கறந்த நுரை கொள் தீம் பால் - மரையாவைக்
கறந்த நுரை கொண்ட இனிய பாலை; மான்தடி புழுக்கிய புலவு நாறு
குழிசி - மான் தடி புழுக்கப்பட்ட புலால் நாறும் பானையினது; வான்
கேழ் இரும்புடை கழாஅது ஏற்றி - நிணந்தோய்ந்த  வெளிய  
நிறத்தினையுடைய பெரிய புறத்தைக் கழுவாதே உலை நீராக
வார்த்து ஏற்றி; சாந்த   விறகின்  உவித்த புன்கம் - சந்தன
விறகான் உவிக்கப்பட்ட சோற்றை; கூதளம் கவினியகுளவி முன்றில்
- கூதாளி கவின் பெற்ற மலைமல்லிகை நாறும் முற்றத்து; செழுங்
கோள்  வாழை  அகல்   இலை  பகுக்கும் - வளவிய
குலையையுடைய வாழையினது அகன்ற   இலைக்கண்ணே
பலருடனே பகுத்துண்ணும்; ஊராக் குதிரைக் கிழவ - ஊரப்படாத
குதிரை யென்னும் மலைக்குத் தலைவ; கூர் வேல் - கூரிய
வேலையும்; நறை நார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி -
நறைக்கொடியின் நாரால் தொடுக்கப்பட்ட வேங்கைப்
பூமாலையினையும்; வடி நவில்அம்பின் -வடித்தல் பயின்ற
அம்பினையுமுடைய;