பக்கம் எண் :

376

 

அதனை யறிந்த மலையமான் முள்ளூர்க்குச் சென்று சோழனைக்
கொணர்ந்து சோழ நாட்டு வேந்தனாக்கி அவனது வெண் குடையும்
அரசும் நிலைபெறச் செய்தனன்.   இத்தகைய   சீரியோர்      
வழிவந்தவனாகலின், திருமுடிக்காரியிறந்ததனால் பொலிவிழந்து வருந்திய  
குடிகட்கு இவன் வேந்தனாகி நலம் புரிந்தான். இவ்வாறு வேந்தாகியபோது
இவனை மாறோக்கத்து நப்பசலையார் கண்டு இப் பாட்டைப் பாடி
இதன்கண், “காவிரி நாடு அரசின்றி அல்லலுற்ற காலத்து முள்ளூரில் இருந்த
சோழ வேந்தனைக் கொணர்ந்து சோழ நாட்டவர்க்கு வேந்தனாகிய
உரவோர் வழி வந்தோனே, நின் முன்னோனாகிய திருமுடிக்காரி
உயர்ந்தோருலகம் பெயர்ந்தானாக, நாடு மழையின்மையால் கோடையில்
உயிர்கள் எய்தும் வருத்தம் போல  மிக்க வருத்தத்தை எய்திற்று.கோடை
வெப்பத்தைப் பெருமழை  பெய்து  போக்கிக் குளிர்ச்சியைச்
செய்வதுபோல, நீ தோன்றி நாட்டவர்க்கு இன்பத்தைச் செய்தாய்;ஆதலால்,
நின்னாட்டவர்க்குக் குறையொன்றும் இல்லையாம்”என்று கூறியுள்ளார்.

 அணங்குடை யவுணர் கணங்கொண்
                    டொளித்தெனச்
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணா
திருள்கண் கெடுத்த பருதி ஞாலத்
திடும்பைகொள் பருவர றீரக் கடுந்திறல்
5 அஞ்சன வுருவன் றந்து நிறுத்தாங்
 கரசிழந் திருந்த வல்லற் காலை
முரசெழுந் திரங்கு முற்றமொடு கரைபொரு
திரங்குபுன் னெரிதரு மிகுபெருங் காவிரி
மல்ல னன்னாட் டல்ல றீரப்
10பொய்யா நாவிற் கபிலன் பாடிய
 மையணி நெடுவரை யாங்க ணொய்யெனச்
செருப்புகன் மறவர் செல்புறங் கண்ட
எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை
அருவழி யிருந்த பெருவிறல் வளவன்
15மதிமருள் வெண்குடை காட்டி யக்குடை
 புதமையி னிறுத்த புகழ்மேம் படுந
விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப்பூட்
சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன்
ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென் றுணீஇயர்
20உயர்ந்தோ ருலகத்துப் பெயர்ந்தன னாகலின்
 ஆறுகொன் மருங்கின் மாதிரந் துழவும்
கவலை நெஞ்சத் தவலந் தீர
நீதோன் றினையே நிரைத்தா ரண்ணல்
கல்கண் பொடியக் கானம் வெம்ப
25மல்குநீர் வரைப்பிற் கயம்பல வுணங்கக்