| எம்மால் வியக்கப் படூஉ மோரே | 10 | இடுமுட் படப்பை மறிமேய்ந் தொழிந்த | | குறுநறு முஞ்ஞைக் கொழுங்கட் குற்றடகு புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம் சீறூர் மன்ன ராயினு மெம்வயிற் பாடறிந் தொழுகும் பண்பி னாரே | 15 | மிகப்பே ரெவ்வ முறினு மெனைத்தும் | | உணர்ச்சி யில்லோ ருடைமை யுள்ளேம் நல்லறி வுடையோர் நல்குர வுள்ளுதும் பெருமயா முவந்துநனி பெரிதே.(197) |
திணையுந் துறையு மவை. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
உரை: வளி நடந் தன்ன வாச் செலல் இவுளியொடு - காற்று இயங் கினாற்போலும் தாவுதலுடைத்தாகிய கதியையுடைய குதிரையொடு; கொடி நுடங்கும் மிசைய தேரினர் எனாஅ - கொடி நுடங்கும் உச்சியையுடைய தேரினையுடைய ரெனவும்; கடல் கண் டன்ன ஒண் படைத் தானையொடு - கடலைக் கண்டாற் போலும் ஒள்ளிய படைக்கலத்தையுடைய சேனையுடனே; மலை மாறு மலைக்கும்களிற்றினர் எனாஅ - மலையோடு மாறுபட்டுப் பொரும் களிற்றினையுடைய ரெனவும்; உரும் உரற் றன்ன உட்கு வரு முரசமொடு - இடி முழங்கினாற்போலும் அஞ்சத்தக்க முரசத்தோடு; செரு மேம்படூஉம் - வென்றியர் எனாஅ - போரின் மேம்படும் வெற்றியையுடைய ரெனவும்; மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர் -நிலத்தைப் பொருந்தின படையினையுடைய ஒள்ளிய பூணினையுடைய அரசர்; வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலம் - வெண் கொற்றக் குடை நிழற்றப்படும் செல்வத்தை மதித்த லில்லேம்; எம்மால் வியக்கப்படூஉமோர் - எங்களால் மதிக்கப்படுவோர்; இடு முள் படப்பை - இடப்பட்ட முள்வேலியையுடைய தோட்டத்து; மறி மேய்ந் தொழிந்த - மறி தின்ன வொழிந்து நின்ற; குறு நறு முஞ்ஞை கொழுங்கண் குற்றடகு - குறிய நாற்றத்தினையுடைய முஞ்ஞையது கொழுவிய கண்ணிற் கிளைக்கப்பட்ட குறிய இலையை; புன் புல வரகின் சொன்றியொடு பெறூஉம் - புல்லிய நிலத்தில் விளைந்த வரகினது சோற்றுடனே பெறுகின்ற; சீறூர் மன்ன ராயினும் - சிறிய வூரையுடைய வேந்தராயினும்; எம் வயின் பாடறிந்தொழுகும் பண்பினோர் - எம்மிடத்துச் செய்யும் முறைமையை யறிந்து நடக்கும் குணத்தினையுடையோர்காண்; |