பக்கம் எண் :

63

    
  மாலைவெண் குடைநீழலான்
வாண்மருங்கிலோர் காப்புறங்க
அலங்குசெந்நெற் கதிர்வேய்ந்த
 15. ஆய்கரும்பின் கொடிக்கூரை
 சாறுகொண்ட களம்போல
வேறுவேறு பொலிபு தோன்றக்
குற்றானா வுலக்கையாற்
கலிச்சும்மை வியலாங்கட்
 20. பொலந்தோட்டுப் பைந்தும்பை
  மிசையலங் குளைய பனைப்போழ் செரீ இச்
சினமாந்தர் வெறிக்குரவை
ஓத நீரிற் பெயர்பு பொங்க
வாய்காவாது பரந்துபட்ட
 25. வியன்பாசறைக் காப்பாள
 வேந்துதந்த பணிதிறையாற்
சேர்ந்தவர் கடும்பார்த்தும்
ஓங்குகொல்லியோ ரடுபொருந
வேழ நோக்கின் விறல்வெஞ் சேஎய்
 30. வாழிய பெருமநின் வரம்பில் படைப்பே
 நிற்பாடிய வலங்கு செந்நாப்
பிறரிசை நுவலாமை
ஓம்பா தீயு மாற்ற லெங்கோ
மாந்தரஞ் சேர லிரும்பொறை யோம்பிய நாடே
 35. புத்தே ளுலகத் தற்றெனக் கேட்டுவந்
  தினிது கண்டிசிற் பெரும முனிவிலை
வேறுபுலத் திறுக்குந் தானையொடு
சோறுபட நடத்திநீ துஞ்சாய் மாறே.
(22)

     திணையும் துறையு மவை. துறை: இயன் மொழியுமாம்.
சேரமான்யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேர லிரும்பொறையைக்
குறுங்கோழியூர் கிழார் பாடியது.

     உரை : தூங்கு கையான் - அசைந்த பெருங் கையுடனே;
ஓங்கு நடைய - தலையெடுத்து நடக்கும் உயர்ந்த நடையை
யுடையனவும்; உறழ் மணியான் - அந்நடைக்கேற்ப ஒன்றற்கொன்று
மாறுபட்டொலிக்கும் மணியுடனே, உயர் மருப்பின - உயர்ந்த
கோட்டினையுடையனவும்; பிறை நுதலால் செறல் நோக்கின - பிறை