பக்கம் எண் :

79

    

உடையோர் சிலர் - புகழும் பாட்டும் உடையோர் சிலர்; மரையிலை
போல மாய்ந்திசினோர் பலர் - தாமரையினது  இலையை யொப்பப்
பயன்படாது மாய்ந்தோர்  பலர்; புலவர்  பாடும் புகழுடையோர் -
புலவராற்    பாடப்படும்  புகழை    யுடையோர்;    விசும்பின் -
ஆகாயத்தின்கண்; வலவன்   ஏவா  வானவூர்தி எய்துப என்ப தம்
செய்வினை முடித்து - பாகனாற்  செலுத்தப்படாத  விமானத்தைப்
பொருந்துவாரென்று சொல்லுவார்  அறிவுடையார்  தாம்  செய்யும்
நல்வினையை முடித்து; எனக்  கேட்பல்  -   என்று சொல்லக்
கேட்பேன்; எந்தை - என்னுடைய இறைவ;சேட்சென்னி நலங்கிள்ளி-;
தேய்த   லுண்மையும் -  வளர்ந்த   தொன்று   பின்    குறை
தலுண்டாதலும்;
பெருக லுண்மையும் - குறைந்த தொன்று பின் வளர்த
லுண்டாதலும்; மாய்த லுண்மையும் - பிறந்த தொன்று பின் இறந்த
லுண்டாதலும்; பிறத்த லுண்மையும் - இறந்த தொன்று பின் பிறத்த
லுண்டாதலும்; அறியாதோரையும் அறியக் காட்டி -கல்வி முகத்தான்
அறியாத மடவோரையும் அறியக் காட்டி;திங்கட் புத்தேள் திரிதரும்
உலகத்து - திங்களாகிய  தெய்வம்  இயங்குகின்ற தேயத்தின்கண்;
வல்லாராயினும் - ஒன்றை  மாட்டாராயினும்; வல்லுந  ராயினும் -
வல்லாராயினும்;  வருந்தி   வந்தோர்   மருங்கு    நோக்கி -
வறுமையான்
வருத்தமுற்று வந்தோரது உண்ணாத மருங்கைப் பார்த்து;
அருள் வல்லை யாகுமதி -அவர்க்கு அருளி வழங்க வல்லை யாகுக;
கெடாத துப்பின் நின் பகை யெதிர்ந்தோர் -கெடாத வலியையுடைய
நினக்குப் பகையாய்  மாறுபட்டோர்;  அருளிலர் -  அருளிலராய்;
கொடாமை வல்ல ராகுக - கொடாமையை வல்லராகுக எ-று.


      நூற்றித ழலரின் நிரைகண் டன்ன உரையும் பாட்டும் உடையோர்
சிலரென இயையும். நிரைகண் டன்ன விழுத்திணையென் றுரைப்பினுமையும்.
அருளிலர் கொடாமை வல்ல ராகுக வென்றதனாற் பயன்,அவையுடையோர்
தத்தம் பகைவரை வெல்வராதலால் பகை யெதிர்ந்தோர் அவையிலராக
வென்பதாம். செய்வினை முடித்து வானவூர்தி எய்துப வென இயையும்.


     விளக்கம்: நூறாகிய   இதழ்   என்ற    விடத்து   நூற்றென்பது
அப்பொருளுணர்த்தும்   எண்ணைக்  குறியாது  பல வென்னும் பொருள்
குறித்து நின்றது. இதனை யறியாதார் வடமொழியில் சததளம் என மொழி
பெயர்த்துக் கொண்டனர்; “நூற்றிதழ்த் தாமரைப்பூ” (ஐங் 20) என்று வேறு
சான்றோரும் கூறுவர். வேற்றுமை செய்வன உயர்வு தாழ்வுகளேயாதலின்,
வேற்றுமையில்லா வென்பதற்கு ஏற்றத் தாழ்வில்லாத என்றுரைத்தார்.
விழுமிய குடிக்கு விழுப்பம் தருவது உயர்வு தாழ்வு கருதாமையே என்பதற்கு
“வேற்றுமை யில்லா விழுத்திணை” என்பது வேற்றுமை மலிந்த