| இமயத் தீண்டி யின்குரல் பயிற்றிக் கொண்டன் மாமழை பொழிந்த நுண்பஃ றுளியினும் வாழிய பலவே. (34) |
திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
உரை: ஆன் முலை அறுத்த அற னிலோர்க்கும் - ஆனினது முலையாற் பெறும் பயனைக் கெடுத்த தீவினையாளர்க்கும்; மாண் இழை மகளிர் கரு சிதைத்தோர்க்கும் - மாட்சிமைப்பட்ட ஆபரணத்தையுடைய பெண்டிரது கருப்பத்தை அழித்தோர்க்கும்; குரவர் தப்பிய கொடுமையோர்க்கும் - தந்தை தாயாரைப் பிழைத்த கொடுந் தொழிலை யுடையோர்க்கும்; வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என - அவர் செய்த பாதகத்தினை யாராயுமிடத்து அவற்றைப் போக்கும் வழியும் உள வெனவும்; நிலம் புடை பெயர்வ தாயினும் - நிலம் கீழ் மேலாம் காலமாயினும்; ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென - ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்தோர்க்கு நரகம் நீங்குதலில்லை யெனவும்; அறம் பாடிற்று - அற நூல் கூறிற்று; ஆயிழை கணவ - தெரிந்த ஆபரணத்தை யுடையாள் தலைவ;காலை யந்தியும் மாலை யந்தியும் - காலையாகிய அந்திப் பொழுதும் மாலையாகிய அந்திப் பொழுதும்; புறவுக் கருவன்ன புன்புல வரகின் - புறவினது கருவாகிய முட்டை போன்ற புல்லிய நிலத்து வரகினது அரிசியை; பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கி - பாலின்கட் பெய்து அடப்பட்ட சோற்றைத் தேனொடு கலந்துண்டு; குறு முயற்கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு - குறிய முயலினது கொழுவிய சூட்டிறைச்சியைத் தின்ற என் சுற்றத்தோடு கூட; இரத்தி நீடிய அகன்றலை மன்றத்து - இலந்தை மரமோங்கிய அகன்ற இடத்தையுடைய பொதியிற்கண்; கரப்பில் உள்ளமொடு-ஒன்றனையும் மறைத்தலில்லாத உள்ளத்துடனே; வேண்டுமொழி பயிற்றி - வேண்டி வார்த்தைகளைப் பலகாலும் கூறி; அமலைக்கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு - பெரிய கட்டியாகிய கொழுவிய சோற்றை யருந்திய பாணர்க்கு; அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன் - நீங்காத செல்வ மெல்லாவற்றையும் செய்தோன்; எங்கோன் வளவன் வாழ்க என்று - எம்முடைய வேந்தனாகிய வளவன் வாழ்வானாக வென்று சொல்லி; நின் பீடு கெழுநோன்றாள் பாடேனாயின் - நினது பெருமை பொருந்திய வலிய தாளைப் பாடிற்றிலே னாயின்; பல் கதிர்ச் செல்வம் படுபறியலனே - வாழ்நாட் கலகாகிய பல கதிரையுடைய செல்வன் தோன்றுத லறியான்; யானோ
|